பாடம்: 12
நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தாரின் குப்பை கொட்டும் இடத்திற்கு வந்து நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள். பின் தண்ணீர் கேட்டு வாங்கி (உளூ செய்யும் போது) காலுறையின் மீது (மஸஹ்) ஈரக்கையால் தடவினார்கள்.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
முஸத்தத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் பின்வருமாறு வந்துள்ளது:
(நபியவர்கள் தண்ணீர் கேட்டபோது அவர்களுக்கு அருகில் தண்ணீரை வைத்துவிட்டு அங்கிருந்து) நான் நகர்ந்து செல்ல நாடியபோது (நபியவர்களுக்குப் பின்னால் மறைப்பு தேவைப்பட்டதால்) தமக்குப் பக்கத்தில் நிற்க வேண்டும் என்பதற்காக) நபியவர்கள், என்னை அழைத்தார்கள். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களின் குதிங்காலுக்கருகில் (மறைப்பாக) நின்றுக் கொண்டேன் என ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்: 23)12 – بَابُ الْبَوْلِ قَائِمًا
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، وَمُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ وَهَذَا لَفْظُ حَفْصٍ عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ:
أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبَاطَةَ قَوْمٍ «فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَسَحَ عَلَى خُفَّيْهِ»
قَالَ أَبُو دَاوُدَ: قَالَ مُسَدَّدٌ: قَالَ: فَذَهَبْتُ أَتَبَاعَدُ فَدَعَانِي حَتَّى كُنْتُ عِنْدَ عَقِبِهِ
Abu-Dawood-Tamil-21.
Abu-Dawood-TamilMisc-21.
Abu-Dawood-Shamila-23.
Abu-Dawood-Alamiah-21.
Abu-Dawood-JawamiulKalim-21.
சமீப விமர்சனங்கள்