நான் குளிப்புக் கடமையாகி இருக்கும் போது மதீனாவின் ஒரு பாதையின் ஒன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை சந்தித்தார்கள். எனவே நான் நழுவி சென்று விட்டேன். குளித்து விட்டு பிறகு வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ எங்கு சென்றாய் என்று வினவியபோது நான் குளிப்புக் கடமையாகி இருந்தேன். அதனால் சுத்தமில்லாமல் உங்களுடன் கலந்து உட்கார விரும்பவில்லை என்று பதில் சென்னேன். அவர்கள் அல்லாஹ் தூய்மையானவன்! ஒரு முஸ்லிம் அசுத்தமாக மாட்டார் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
பக்ரிடமிருந்து ஹுமைதிடமிருந்து என்பதற்கு பதிலாக எனக்கு பக்ரிடமிருந்து ஹுமைதிடமிருந்து என்பதற்கு பதிலாக எனக்கு பக்ர் அறிவித்தார் என்று பிஷ்ர் அவர்கள் குறிப்பிடுவதாக பிஷ்ர் அவர்களுடைய ஹதீஸில் உள்ளது (பிஷ்ர் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராவார்.)
(அபூதாவூத்: 231)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، وَبِشْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ بَكْرٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ
لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَرِيقٍ مِنْ طُرُقِ الْمَدِينَةِ وَأَنَا جُنُبٌ، فَاخْتَنَسْتُ فَذَهَبْتُ فَاغْتَسَلْتُ، ثُمَّ جِئْتُ فَقَالَ: «أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ؟» قَالَ: قُلْتُ: إِنِّي كُنْتُ جُنُبًا فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ عَلَى غَيْرِ طَهَارَةٍ. فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ، إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ» وَقَالَ فِي حَدِيثِ بِشْرٍ، حَدَّثَنَا حُمَيْدٌ، حَدَّثَنِي بَكْرٌ
AbuDawood-Tamil-231.
AbuDawood-Shamila-231.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்