தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-232

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 93

குளிப்புக் கடமையானவர் பள்ளியில் பிரவேசிக்கத் தடை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களின் வீட்டு வாயில்கள் (பள்ளிக்குள் வந்து போக வசதியாக பள்ளியை முன்னோக்கியவாறு) பள்ளியோடு இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இந்த (வீட்டு) வாயில்களை பள்ளியை விட்டும் (வேறு திசையை) நோக்கி மாற்றி அமையுங்கள் என்று கட்டளையிட்டார்கள். பிறகு நபி (ஸல்) (வீட்டுக்குள் அல்லது பள்ளிக்குள்) நுழைந்து விட்டனர். தங்களுக்கு (இந்த உத்தரவில்) சலுகைக் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து அவர்கள்எதையுமே செய்யாதிருந்தனர். இதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த வீட்டு வாயில் பள்ளியை விட்டும் (வேறு திசையை நோக்கி) மாற்றி அமையுங்கள். ஏனெனில் பள்ளியை மாதவிடாய் ஆனவளுக்கும், குளிப்பு கடமையானவளுக்கும் (நுழைவதற்கு) நான் அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

இமாம் அபூதாவூத் என்பவர் குறிப்பிடுகிறார்கள் :

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்லத் என்பவர் புலைத் அல்ஆமிரி ஆவார்.

(அபூதாவூத்: 232)

93- بَابٌ فِي الْجُنُبِ يَدْخُلُ الْمَسْجِدَ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الْأَفْلَتُ بْنُ خَلِيفَةَ قَالَ: حَدَّثَتْنِي جَسْرَةُ بِنْتُ دَجَاجَةَ قَالَتْ: سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا تَقُولُ

جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوُجُوهُ بُيُوتِ أَصْحَابِهِ شَارِعَةٌ فِي الْمَسْجِدِ، فَقَالَ: «وَجِّهُوا هَذِهِ الْبُيُوتَ عَنِ الْمَسْجِدِ». ثُمَّ دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَصْنَعِ الْقَوْمُ شَيْئًا رَجَاءَ أَنْ تَنْزِلَ فِيهِمْ رُخْصَةٌ، فَخَرَجَ إِلَيْهِمْ بَعْدُ فَقَالَ: «وَجِّهُوا هَذِهِ الْبُيُوتَ عَنِ الْمَسْجِدِ، فَإِنِّي لَا أُحِلُّ الْمَسْجِدَ لِحَائِضٍ وَلَا جُنُبٍ» قَالَ أَبُو دَاوُدَ: هُوَ فُلَيْتٌ الْعَامِرِيُّ


AbuDawood-Tamil-232.
AbuDawood-Shamila-232.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.