இந்த ஹதீஸ் மேலுள்ள அதே இஸ்நாத் பொருளைக் கொண்டே இடம் பெறுகிறது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யசீத் பின் ஹாரூன். இந்த ஹதீஸின் ஆரம்பத்தில் (நுழைந்தார்கள்) என்பதை அடுத்து தக்பீர் கூறினார்கள் என்றும், அதன் கடைசியில் அவர்கள் தொழுகையை முடித்த போது நானும் மனிதன் தான். நான் குளிப்புக் கடமையாக இருந்தேன் என்று சொன்னார்கள் என்றும் அறிவிக்கின்றார்கள்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபூஸலமா வாயிலாக ஜுஹ்ரி அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது அவர்கள் தான் தொழுமிடத்தில் நின்று அவர்கள் தக்பீர் சொல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது அவர்கள் (தொழுகையை விட்டும்) திரும்பி விட்டார்கள். பிறகு அப்படியே இருங்கள் என்று சொன்னார்கள் என்று குறிப்பிடுகின்றார். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். பிறகு கையினால் மக்களுக்கு உட்காருங்கள் என்று சைகை செய்து விட்டு, சென்று குளித்தார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை முர்ஸலாக முஹம்மத் அவர்கள் வாயிலாக அயூப், இப்னு அவ்ன், ஹிஷாம் ஆகியோர் அறிவிக்கின்றார்கள்.
இதே போன்று (முர்ஸலாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் தக்பீர் சொன்னார்கள் என்று அதா பின் யஸார் வழியாக இஸ்மாயில் பின் அபூஹகீம் மூலம் இமாம் மாலிக் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இமாம் அபூதாவூத் (ரலி) அவர்கள் தக்பீர் கூறுகின்றார்கள் :
நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து ரபீஃ பின் முஹம்மது, யஹ்யா, அபான் ஆகியோர் வாயிலாக இதை எமக்கு முஸ்லிம் பின் இப்றாகீம் அறிவிக்கின்றார்கள்.
(அபூதாவூத்: 234)حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ
وَقَالَ: فِي أَوَّلِهِ: «فَكَبَّرَ». وَقَالَ فِي آخِرِهِ: ” فَلَمَّا قَضَى الصَّلَاةَ قَالَ: «إِنَّمَا أَنَا بَشَرٌ، وَإِنِّي كُنْتُ جُنُبًا».
قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ الزُّهْرِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: ” فَلَمَّا قَامَ فِي مُصَلَّاهُ، وَانْتَظَرْنَا أَنْ يُكَبِّرَ انْصَرَفَ، ثُمَّ قَالَ: «كَمَا أَنْتُمْ». قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ أَيُّوبُ، وَابْنُ عَوْنٍ، وَهِشَامٌ، عَنْ مُحَمَّدٍ مُرْسَلًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «فَكَبَّرَ ثُمَّ أَوْمَأَ بِيَدِهِ إِلَى الْقَوْمِ أَنِ اجْلِسُوا، فَذَهَبَ فَاغْتَسَلَ». وَكَذَلِكَ رَوَاهُ مَالِكٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي حَكِيمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَبَّرَ فِي صَلَاةٍ». قَالَ أَبُو دَاوُدَ: وَكَذَلِكَ حَدَّثَنَاه مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبَانُ، عَنْ يَحْيَى، عَنِ الرَّبِيعِ بْنِ مُحَمَّدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ كَبَّرَ»
AbuDawood-Tamil-234.
AbuDawood-Shamila-234.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்