இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தனது வலது கையால் இடது கைக்கு ஒரு தடவை தண்ணீர் ஊற்றுவார்கள். பிறகு தனது மறைவு உறுப்பைக் கழுவுவார்கள். தான் எத்தனை தடவை ஊற்றினோம் என்பதை அவர்கள் ஒரு தடவை மறந்து விட்ட போது என்னிடம் நான் எத்தனை தடவை ஊற்றினேன் என்று வினவினார்கள். நான் எனக்குத் தெரியாது என்று சொன்னதும், உனக்குத் தாய் இல்லாமல் போகட்டும்! ஏன் உனக்குத் தெரியவில்லை என்று கேட்டார்கள். பிறகு அவர்கள் தொழுகைக்கு உலூச் செய்வது போன்று உலூச் செய்வார்கள். பிறகு தன் மேனியில் தண்ணீரை ஊற்றுவார்கள். பிறகு இவ்வாறு தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பார்கள் என கூறுவார்கள்.
அறிவிப்பவர் : ஷுஃபா.
(அபூதாவூத்: 246)حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عِيسَى الْخُرَاسَانِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ شُعْبَةَ قَالَ
إِنَّ ابْنَ عَبَّاسٍ كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ يُفْرِغُ بِيَدِهِ الْيُمْنَى عَلَى يَدِهِ الْيُسْرَى سَبْعَ مِرَارٍ، ثُمَّ يَغْسِلُ فَرْجَهُ – فَنَسِيَ مَرَّةً كَمْ أَفْرَغَ، فَسَأَلَنِي كَمْ أَفْرَغْتُ؟ فَقُلْتُ لَا أَدْرِي. فَقَالَ: لَا أُمَّ لَكَ، وَمَا يَمْنَعُكَ أَنْ تَدْرِيَ؟ – ثُمَّ يَتَوَضَّأُ وُضُوءَهُ لِلصَّلَاةِ، ثُمَّ يُفِيضُ عَلَى جِلْدِهِ الْمَاءَ “. ثُمَّ يَقُولُ: «هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَطَهَّرُ»
AbuDawood-Tamil-246.
AbuDawood-Shamila-246.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்