தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-255

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

தங்களுக்கு சவ்பான் (ரலி) அறிவித்தார்கள் என கடமையான குளிப்பு முறையை பற்றி எனக்கு ஜுபைர் பின் நுபைர் தீர்ப்பளித்தார். கடமையான குளிப்பு முறைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்பு கோரிய போது, ஒரு ஆண் தனது தலை(முடி)யை விரித்து விட வேண்டும். முடிகளின் அடிக்காம்புகளுக்கு நீர் சென்று அடையும் அளவுக்கு அதை அவர் கழுவ வேண்டும். ஒரு பெண் அவள் மீது (முடியை) அவிழ்த்து விடாமல் இருப்பது தவறில்லை. அவள் தமது இரு கைகளால் மூன்று தடவைகள் தண்ணீரை அள்ளி தலையில் விட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர் : ஷுரைஹ் பின் அபீத்.

(அபூதாவூத்: 255)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ، قَالَ: قَرَأْتُ فِي أَصْلِ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ قَالَ: ابْنُ عَوْفٍ، وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِيهِ، حَدَّثَنِي ضَمْضَمُ بْنُ زُرْعَةَ، عَنْ شُرَيْحِ بْنِ عُبَيْدٍ قَالَ

أَفْتَانِي جُبَيْرُ بْنُ نُفَيْرٍ عَنِ الْغُسْلِ مِنَ الجَنَابَة، أَنَّ ثَوْبَانَ حَدَّثَهُمْ أَنَّهُمُ اسْتَفْتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ: «أَمَّا الرَّجُلُ فَلْيَنْشُرْ رَأْسَهُ فَلْيَغْسِلْهُ حَتَّى يَبْلُغَ أُصُولَ الشَّعْرِ، وَأَمَّا الْمَرْأَةُ فَلَا عَلَيْهَا أَنْ لَا تَنْقُضَهُ لِتَغْرِفْ عَلَى رَأْسِهَا ثَلَاثَ غَرَفَاتٍ بِكَفَّيْهَا»


AbuDawood-Tamil-255.
AbuDawood-Shamila-255.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.