பாடம்: 15
குளியலறையில் சிறுநீர் கழித்தல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் கண்டிப்பாக குளியலறையில் சிறுநீர் கழித்து விட்டு பிறகு அங்கேயே குளிக்க வேண்டாம்.
-பிறகு அதில் உளூச் செய்யவும் வேண்டாம்-ஏனெனில் அதில் தான் பெருமளவு மனக்குழப்பம் உள்ளது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஃகப்பல் (ரலி)
அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹஸன் பின் அலீ அவர்கள், “குளியலறையில் சிறுநீர் கழித்து விட்டு பிறகு அங்கேயே குளிக்க வேண்டாம்” என்று அறிவித்துள்ளார்.
அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அஹ்மத் இமாம் அவர்கள், “குளியலறையில் சிறுநீர் கழித்து விட்டு பிறகு அங்கேயே உளூச் செய்ய வேண்டாம்” என்று அறிவித்துள்ளார்.
(அபூதாவூத்: 27)15 – بَابٌ فِي الْبَوْلِ فِي الْمُسْتَحَمِّ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَحْمَدُ: حَدَّثَنَا مَعْمَرٌ، أَخْبَرَنِي أَشْعَثُ، وَقَالَ الْحَسَنُ: عَنْ أَشْعَثَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي مُسْتَحَمِّهِ ثُمَّ يَغْتَسِلُ فِيهِ
قَالَ أَحْمَدُ: ثُمَّ يَتَوَضَّأُ فِيهِ فَإِنَّ عَامَّةَ الْوَسْوَاسِ مِنْهُ
Abu-Dawood-Tamil-25.
Abu-Dawood-TamilMisc-25.
Abu-Dawood-Shamila-27.
Abu-Dawood-Alamiah-25.
Abu-Dawood-JawamiulKalim-25.
சமீப விமர்சனங்கள்