தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-270

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

எங்களில் ஒருவர் மாத விலக்காகி விடுவர். அவளுக்கும் அவருடைய கணவருக்கும் ஒரு விரிப்பைத் தவிர வேறு எதுவும் இருக்காது (அப்போது என்ன செய்யவேண்டும்?) என்று தனது அத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள் என்று உனக்கு அறிவிக்கிறேன் என்று பின் வருமாறு கூறினார்கள் :

(நான் மாதவிலக்காகி இருக்கும் போது என்னிடம்) அவர்கள் வந்தார்கள். பிறகு உடனே அவர்கள் தனது பள்ளிக்கு சென்றார்கள். எனது கண்கள் (உறக்கத்தில்) என்னை ஆட்கொள்ளும் வரை அவர்கள் திரும்பவில்லை. அவர்களை குளிர் வதைத்ததும் (என்னிடம் வந்து) நீ நெருங்கி வா என்று கூறினார்கள். நான் மாதவிலக்கானவள் என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள் உனது தொடைகளை வெளிப்படுத்துக என்று சொன்னதும் எனது தொடைகளை வெளிப்படுத்தினேன். அவர்கள் தனது கன்னத்தையும் மார்பையும் எனது தொடையின் மீது வை(த்துப்டு)த்தார்கள். நான் அவர்கள் மீது குப்புற சாய்ந்தேன். அவர்கள் (உடல்) சூடாகி (வெதுவெதுப்படைந்து) உறங்கிவிட்டார்கள்.

அறிவிப்பவர் : தன் அத்தை வழியாக உமாரா பின் குராப்.

(அபூதாவூத்: 270)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ يَعْنِي ابْنَ عُمَرَ بْنِ غَانِمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ زِيَادٍ، عَنْ عُمَارَةَ بْنِ غُرَابٍ قَالَ: إِنَّ عَمَّةً لَهُ حَدَّثَتْهُ

أَنَّهَا سَأَلَتْ عَائِشَةَ قَالَتْ: إِحْدَانَا تَحِيضُ وَلَيْسَ لَهَا وَلِزَوْجِهَا إِلَّا فِرَاشٌ وَاحِدٌ؟ قَالَتْ: أُخْبِرُكِ بِمَا صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ فَمَضَى إِلَى مَسْجِدِه – قَالَ أَبُو دَاوُدَ: تَعْنِي مَسْجِدَ بَيْتِهِ – فَلَمْ يَنْصَرِفْ حَتَّى غَلَبَتْنِي عَيْنِي وَأَوْجَعَهُ الْبَرْدُ فَقَالَ: «ادْنِي مِنِّي». فَقُلْتُ: إِنِّي حَائِضٌ. فَقَالَ: «وَإِنْ، اكْشِفِي عَنْ فَخِذَيْكِ». فَكَشَفْتُ فَخِذَيَّ فَوَضَعَ خَدَّهُ وَصَدْرَهُ عَلَى فَخِذِي، وَحَنَيْتُ عَلَيْهِ حَتَّى دَفِئَ وَنَامَ


AbuDawood-Tamil-270.
AbuDawood-Shamila-270.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.