ஃபாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எனக்கு இரத் தப்போக்கு அதிகம் இருப்பதாக முறையிட்டேன். அதற்கு அவர்கள், “இது, இரத்தக் குழாயிலிருந்து வரும் இரத்தமாகும்” என்று சொல்லிவிட்டு, “உனக்கு மாதவிடாய் வழக்கமாக ஏற்படும் காலத்தைக் கணக்கிட்டு அந்நாள்களில் தொழாதே.
உனது மாதவிடாய்க் காலம் முடிந்துவிட்டால்…
…
பாத்திமா பின் அபீ ஹுபைஷ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொடர் உதிரப்போக்கு பற்றி கேட்டு முறையிட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிச்சயமாக அந்த உதிரப்போக்கு ஏற்படுவது ஒரு நரம்பு (காரணமாகத்)தான் என்பதை நீ கவனித்துக் கொள். உன் (வழக்கமான) மாதவிடாய் (காலம்) வந்ததும் நீ தொழாதே. உன் (வழக்கமான) மாதவிடாய் (காலம்) முடிந்ததும் நீ (குளித்து) துப்புரவாகிக் கொள். பிறகு (அந்த வழக்கமான காலத்தை தாண்டி ஏற்படும் மாதவிடாயை கவனத்தில் கொள்ளாது) ஒரு மாதவிடாய் (காலத்திற்)கும் இன்னொரு மாதவிடாய் (காலத்திற்)கும் இடைப்பட்ட காலத்தில் தொழுது கொள்க என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உர் பின் ஜுபைர் (ரலி)
(அபூதாவூத்: 280)حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ الْمُنْذِرِ بْنِ الْمُغِيرَةِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ حَدَّثَتْهُ
أَنَّهَا، سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَشَكَتْ إِلَيْهِ الدَّمَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكَ عِرْقٌ فَانْظُرِي إِذَا أَتَى قَرْؤُكِ فَلَا تُصَلِّي، فَإِذَا مَرَّ قَرْؤُكِ فَتَطَهَّرِي، ثُمَّ صَلِّي مَا بَيْنَ الْقَرْءِ إِلَى الْقَرْءِ»
Abu-Dawood-Tamil-242.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-280.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
..
இந்த ஹதீஸ் நஸயீயிலும் பதிவாகியுள்ளது.
குறிப்பு : 1
இந்த தொடரில் முன்திர் பின் அல் முகீரா இடம் பெறுகின்றார். இவரைப் பற்றி அபூஹாதம் ராசியிடம் கேட்கப்பட்ட போது அவர் யாரெனத் தெரியாதவர். பிரபல்யம் இல்லாதவர் என பதிலளித்தார் என ஹாபிழ் முன்திரி குறிப்பிடுகின்றார்.
…
சமீப விமர்சனங்கள்