தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-282

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 108

அதிக இரத்தப்போக்குள்ளவள் வழக்கமான மாதவிடாய் நாட்கள் முடிந்துவிட்டால் (இரத்தம் வந்து கொண்டிருந்தாலும்) தொழுகையை விடக்கூடாது

ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் அதிக இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) உள்ளவளாக இருக்கிறேன். (குளித்து) தூய்மையாக முடியாமல் இருக்கிறேன். தொழுகையைத் தவிர்த்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இது இரத்தக் குழாயிலிருந்து வெளிப் படும் இரத்தமாகும், (கர்ப்பப் பையிலிருந்து வெளியாகும்) மாத விடாய் இரத்தமல்ல. ஆகவே, (மாதத்தின் வழக்கமான) மாதவிடாய் நாள்கள் வரை தொழுகையைத் தவிர்த்துவிடு.
(வழக்கமான) மாதவிடாய் நாள்கள் முடிந்தபின் இரத்தத்தைக் கழுவிவிட்டு (குளித்தபின்) தொழுதுகொள்” என்று கூறினார்கள்.

….

பாடம் : 109

மாதவிலக்கு நின்றதும் தொழுகையை விடக்கூடாது என்று வரும் அறிவிப்புகள்.

பாத்திமா பின்த் அபீஹுபைஷ் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களிடம் வந்துநான் உதிரப்போக்குள்ள ஒரு பெண். அதனால் (மற்ற பெண்களை போல்) உடனே நான் துப்பரவாக முடியவில்லை. எனவே, நான் தொழுகையை விடலாமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நிச்சயமாக அது ஒரு நரம்பு(க் காரணமாகத்)தான் (ஏற்படுகின்றது). அது (வழக்கமான) மாதவிடாய் அல்ல. எனவே, (அத்தகைய) மாதவிடாய் வந்து விட்டால் தொழுகையை விட்டுவிடு. (வழக்கமான) மாதவிடாய் (காலம்) நின்றதும் இரத்தத்தை கழுவி (குளித்து) விட்டு பிறகு தொழுது கொள்வாயாக என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது.

அடிக்குறிப்பு : 

இங்கு கழுவி விட்டு என்று வந்திருப்பதால் குளிப்பு கடமையில்லை என்று யாரும் விளங்கிவிடக்கூடாது. புகாரியில் வரும் ஓர் அறிவிப்பு குளிப்பு என்றே தெளிவாக இடம் பெறுகின்றது.

(அபூதாவூத்: 282)

109- بَابُ مَنْ رَوَى أَنَّ: الْحَيْضَةَ إِذَا أَدْبَرَتْ لَا تَدَعُ الصَّلَاةَ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ قَالَا حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ

أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلَا أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلَاةَ؟ قَالَ: «إِنَّمَا ذَلِكَ عِرْقٌ، وَلَيْسَتْ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ، ثُمَّ صَلِّي»


Abu-Dawood-Tamil-244.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-282.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.