தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-286

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி)க்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அவரிடம் நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் இரத்தம் அறியப்பட்ட கருத்த இரத்தமாகும். இந்த இஸ்ரத்தம் வந்திருந்தால் நீ தொழுகையை விட்டு விடு. வேறு இரத்தமாக இருந்தால் நீ உலூச் செய்து தொழு. நிச்சயமாக அது ஒரு நரம்பு (காரணமாக)த்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உர்வா பின் ஜுபைர் அறிவிக்கின்றார்.

இப்னு அபூ அதீ தனது ஏட்டிலிருந்து மேற்கண்ட மாதிரி அறிவித்தார். பிறகு அவர் மனனமாக அறிவிக்கும் போது பாதிமாவுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது என்று மேலுள்ள ஹதீஸின் கருத்தை ஆயிஷா (ரலி) அறிவித்ததாக உர்வா மூலம் ஜுஹ்ரி வழியாக முஹம்மது பின் முஸன்னா அறிவித்தார் என்று குறிப்பிட்டார். இவ்வாறு முஹம்மது பின் முஸன்னா தெரிவிக்கின்றார்.

இரத்தம் பெருக்கெடுத்து ஓடுவதை ஒரு பெண் கண்டால் அவர் தொழ வேண்டாம். ஒரு மணிநேர நேரஅளவுக்கு துப்புரவை கண்டால்கூட அவர் குளித்துத் தொழுவாராக என உதிரப்போக்குள்ள பெண் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அனஸ் பின் சிரீன் அறிவிக்கின்றார்.

பெண்களுக்கு மாதவிடாய் தெரியாததல்ல! நிச்சயம் மாதவிடாய் அடர்த்தியான கருத்த இரத்தமாகும். இது நின்று மெல்லிய மஞ்சள் இரத்தமாக மாறிவிட்டால் அது உதிரப்போக்கு ஏற்பட்டதாகும். எனவே அவள் குளித்துவிட்டு தொழுவாளாக என்று மக்ஹுல் தெரிவிக்கின்றார்.

மாதவிடாய் வந்ததும் தொழுகையை விட்டுவிடுவாளாக அது நின்று விட்டால் குளித்து தொழுவாளாக என்று உதிரப்போக்குடைய பெண் தொடர்பாக சயீத் பின் அல்முஸய்யப் கூறியதாக கஃகாஃ பின் ஹகீம் – யஹ்யா பின் சயீத் வழியாக ஹம்மாத் பின் சைத் அறிவிக்கின்றார்.

அவர் தனது மாதவிடாய் நாட்களில் (தொழாமல்) இருப்பார்களாக என சயீத் பின் அல்முஸய்யப் வழியாக சுமைய்யும் மற்றவர்களும் அறிவிக்கின்றனர். சயீத் பின் அல்முஸய்யபிடமிருந்து யஹ்யா மூலம் இதுபோலவே இந்த கருத்தை ஹம்மாத் பின் ஸலமாஅறிவிக்கின்றார்.

ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்ட பிறகு இரத்தம் ஒரு நாள் அல்லது இரு நாட்கள் நீடித்தால் அவள் தொழாமல் இருப்பாராக. அதன் பிறகு இரத்தம் வந்தால் அவள் இரத்தப்போக்குள்ள பெண்ணாவாள் என ஹஸன் தெரிவிப்பதாக யூனுஸ் அறிவிக்கின்றார்.

மாதவிடாய் நாட்களைவிட ஐந்து நாட்கள் அதிகமாக இரத்தம் வந்தால் அவள் (உதிரப்போக்குள்ளவள்). எனவே குளித்து விட்டு தொழுவாளாக என்று கதாதா தெரிவிப்பதாக தைமிய்யா கூறுகின்றார்.

(இவ்வாறு கதாதாவிடம்) குறைத்து குறைத்து நான் இரண்டு நாட்கள் என்றதும் இரண்டு நாட்கள் எனில், அது மாதவிடாய் இரத்தம்தான் (உதிரப்போக்குள்ளவள் இரத்தமல்ல) என கதாதா தெரிவித்ததாக தைமிய்யா குறிப்பிடுகின்றார்.

உதிரப்போக்கு இரத்தம் பற்றி இப்னு சிரீனிடம் வினவப்பட்ட போது பெண்களே இது பற்றி மிகவும் தெரிந்தவர்கள் என இவர் பதிலளித்தார்.

(அபூதாவூத்: 286)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، عَنْ مُحَمَّدٍ يَعْنِي ابْنَ عَمْرٍو قَالَ: حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ فَاطِمَةَ بِنْتِ أَبِي حُبَيْشٍ

أَنَّهَا كَانَتْ تُسْتَحَاضُ، فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ دَمُ الْحَيْضَةِ فَإِنَّهُ أَسْوَدُ يُعْرَفُ، فَإِذَا كَانَ ذَلِكَ فَأَمْسِكِي عَنِ الصَّلَاةِ، فَإِذَا كَانَ الْآخَرُ فَتَوَضَّئِي وَصَلِّي فَإِنَّمَا هُوَ عِرْقٌ»

قَالَ أَبُو دَاوُدَ: وَقَالَ ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا بِهِ ابْنُ أَبِي عَدِيٍّ مِنْ كِتَابِهِ هَكَذَا، ثُمَّ حَدَّثَنَا بِهِ بَعْدُ حِفْظًا قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ كَانَتْ تُسْتَحَاضُ فَذَكَرَ مَعْنَاهُ. قَالَ أَبُو دَاوُدَ: وَقَدْ رَوَى أَنَسُ بْنُ سِيرِينَ، عَنِ ابْنِ عَبَّاسٍ فِي الْمُسْتَحَاضَةِ قَالَ: «إِذَا رَأَتِ الدَّمَ الْبَحْرَانِيَّ فَلَا تُصَلِّي، وَإِذَا رَأَتِ الطُّهْرَ وَلَوْ سَاعَةً فَلْتَغْتَسِلْ وَتُصَلِّي» وَقَالَ مَكْحُولٌ: «إِنَّ النِّسَاءَ لَا تَخْفَى عَلَيْهِنَّ الْحَيْضَةُ إِنَّ دَمَهَا أَسْوَدُ غَلِيظٌ، فَإِذَا ذَهَبَ ذَلِكَ وَصَارَتْ صُفْرَةً رَقِيقَةً، فَإِنَّهَا مُسْتَحَاضَةٌ فَلْتَغْتَسِلْ وَلْتُصَلِّ» قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَى حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ فِي الْمُسْتَحَاضَةِ: «إِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ تَرَكَتِ الصَّلَاةَ، وَإِذَا أَدْبَرَتِ اغْتَسَلَتْ وَصَلَّتْ» وَرَوَى سُمَيٌّ وَغَيْرُهُ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ «تَجْلِسُ أَيَّامَ أَقْرَائِهَا» وَكَذَلِكَ رَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَن سَعِيدِ بْنِ الْمُسَيِّب قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَى يُونُسُ، عَنِ الْحَسَنِ «الْحَائِضُ إِذَا مَدَّ بِهَا الدَّمُ تُمْسِكُ بَعْدَ حَيْضَتِهَا يَوْمًا أَوْ يَوْمَيْنِ فَهِيَ مُسْتَحَاضَةٌ» وَقَالَ التَّيْمِيُّ: عَنْ قَتَادَةَ «إِذَا زَادَ عَلَى أَيَّامِ حَيْضِهَا خَمْسَةُ أَيَّامٍ فَلْتُصَلِّ» وقَال التَّيْمِيُّ: فَجَعَلْتُ أَنْقُصُ حَتَّى بَلَغَتْ يَوْمَيْنِ. فَقَالَ: إِذَا كَانَ يَوْمَيْنِ فَهُوَ مِنْ حَيْضِهَا، وسُئِلَ ابْنُ سِيرِينَ عَنْهُ فَقَالَ: النِّسَاءُ أَعْلَمُ بِذَلِكَ


AbuDawood-Tamil-286.
AbuDawood-Shamila-286.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.