தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-290

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இந்த ஹதீஸை உர்வா – இப்னு ஹிஷாம் – லைஸ் பின் சஃத் வழியாக யசீத் பின் காலித் பின் அப்துல்லாஹ் பின் மவ்ஹிம் அல்ஹமதானி அறிவிக்கும் போது ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பார் என ஆயிஷா (ரலி) அறிவித்ததாக தெரிவிக்கின்றார்.

உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) – ஆயிஷா (ரலி) – (உர்வாவுக்கு பதிலாக) அம்ரா – இப்னு ஹிஷாம் – யூனுஸ் வழியாக காஸிம் பின் மப்ரூர் இதை அறிவிக்கின்றார்.

(உர்வாவுக்கு பதிலாக அம்ரா என்று) காஸிம் அறிவிப்பது போலவே ஆயிஷா (ரலி) – அம்ரா – ஜுஹ்ரி வழியாக மஃமர் அறிவிக்கின்றார். (ஆயிஷா (ரலி) என்று குறிப்பிடாமல்) மேலுள்ள ஹதீஸ் கருத்துப்படி உம்முஹபீபா – அம்ரா வழியாக என்று ம்மஃமர் அறிவித்திருக்கின்றார்.

இது மாதிரியே (உர்வா என்பதற்கு பதிலாக ஆயிஷா (ரலி) – அம்ரா – ஜுஹ்ரி வழியாக இதை இப்ராஹீம் பின் சஃத், இப்னு உஐனா ஆகியோர் அறிவிக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் அவû (ஒவ்வொரு தொழுகையின் போதும்) குளிக்கும் படி கட்டளையிட்டார்கள் என்று ஜுஹ்ரி அறிவிக்கவில்லை என இப்னு உஐனா தனது ஹதீஸில் குறிப்பிடுகின்றார்.

ஒவ்வொரு தொழுகைக்கும் அவர் குளிப்பார் என ஆயிஷா (ரலி) அறிவித்ததாக மீண்டும் இதை மாதிரியே இந்த ஹதீஸை அவ்ஸாயீ அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 290)

حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ بِهَذَا الْحَدِيثِ قَالَ فِيهِ

فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ. قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ الْقَاسِمُ بْنُ مَبْرُورٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَاب، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ أُمِّ حَبِيبَةَ بِنْتِ جَحْشٍ وَكَذَلِكَ رَوَاهُ مَعْمر، عَنِ الزُّهْرِيِّ، عَن عَمْرَةَ، عَنْ عَائِشَةَ وَرُبَّمَا قَال مَعْمَرٌ: عَنْ عَمْرَةَ، عَنْ أُمِّ حَبِيبَةَ بِمَعْنَاهُ، وَكَذَلِكَ رَوَاهُ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، وَابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، وَقَال ابْنُ عُيَيْنَةَ فِي حَدِيثِهِ، وَلَمْ يَقُلْ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهَا أَنْ تَغْتَسِلَ، وَكَذَلِكَ رَوَاهُ الْأَوْزَاعِيُّ أَيْضًا قَالَ فِيهِ: قَالَتْ عَائِشَةُ: «فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ»


AbuDawood-Tamil-290.
AbuDawood-Shamila-290.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.