ஒருபெண்மணிக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அவர் அப்துற்றஹ்மான் பின் அவ்ப் (ரலி)யின் மனைவியாவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு ஒவ்வொரு தொழுகையின் போதும் குளித்து தொழ வேண்டும் என ஏவினார்கள் என்று ஜைனப் பின்த் அபூஸலமா அறிவிக்கின்றார்கள்.
துப்புரவான பிறகு சந்தேகம் ஏற்படும் வகையில் எதையேனும் காண்கின்ற பெண் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது ஒரு நரம்பு (காரணமாகத்)தான் என்றோ அல்லது நரம்புகள் என்றோ கூறினார்கள். இவ்வாறு ஆயிஷா (ரலி) அறிவித்ததாக ஜைனப் பின்த் அபூஸலமா அறிவிக்கின்றார்கள்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
(இந்த ஹதீஸில் குளிக்க வேண்டும் என்ற காரியம் மட்டும இடம் பெறுகின்றது) ஆனால் (அந்த ஹதீஸில்) பின்னால் இடம் பெறும் தன்னுடைய ஹதீஸில் (295 வது ஹதீஸ்) காஸிம் அறிவித்திருப்பது போன்று இப்னு அகீல் அறிவிக்கும் (287 வது ஹதீஸில்) இரண்டு காரியங்களும் சேர்ந்தே இடம் பெற்றிருக்கின்றன. (அந்த ஹதீஸில்) ஒவ்வொரு தொழுகைக்கும் நீ குளித்துக் கொள் அல்லது இரண்டு தொழுகைகளை சேர்த்து (தொழுது) கொள்க என்று நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதே கருத்து அலி (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரிடமிருந்து சயீத் பின் ஜுன்பா வழியாக அறிவிக்கப்படுகின்றது.
(அபூதாவூத்: 293)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ أَبِي الْحَجَّاجِ أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ قَالَ: أَخْبَرَتْنِي زَيْنَبُ بِنْتُ أَبِي سَلَمَةَ
أَنَّ امْرَأَةً كَانَتْ تُهَرَاقُ الدَّمَ، وَكَانَتْ تَحْت عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَرَهَا أَنْ تَغْتَسِلَ عِنْدَ كُلِّ صَلَاةٍ وَتُصَلِّي» وأَخْبَرَنِي أَنَّ أُمَّ بَكْرٍ أَخْبَرَتْهُ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ: ” إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فِي الْمَرْأَةِ تَرَى مَا يُرِيبُهَا بَعْدَ الطُّهْرِ «إِنَّمَا هِيَ عِرْقٌ» أَوْ قَالَ: «عُرُوقٌ»
قَالَ أَبُو دَاوُدَ: وَفِي حَدِيثِ ابْنِ عَقِيلٍ الْأَمْرَانِ جَمِيعًا وَقَالَ: «إِنْ قَوِيتِ فَاغْتَسِلِي لِكُلِّ صَلَاةٍ، وَإِلَّا فَاجْمَعِي» كَمَا قَالَ الْقَاسِمُ فِي حَدِيثِهِ، وَقَدْ رُوِيَ هَذَا الْقَوْلُ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَلِيٍّ، وَابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
AbuDawood-Tamil-293.
AbuDawood-Shamila-293.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்