தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-297

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 113

உதிரப்போக்குடையவள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்காமல் மாதவிடாய் நிற்கும் மட்டும் குளித்தல்.

சூதகரத்தப்போக்கு உள்ளவள் தொடர்பாக, அவர் தனது மாதவிடாய் நாட்களில் (மட்டும்) தொழுகையை விட்டு விடுவாராக! பிறகு குளித்து தொழுவாராக. மேலும் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்தல் வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மது ஜாபிர் பின் ஜியாத்

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

உஸ்மான் பின் அபீஷைபா என்பார், அவர் நோன்பு நோற்பாராக மேலும் தொழுவாராக என்று கூடுதலாக அறிவிக்கின்றார். 

(குறிப்பு : இந்த ஹதீஸை இமாம் திர்மிதி, இப்னுமாஜாஆகியோரும் பதிவு செய்துள்ளனர்.

கூபா நகரின் நீதிபதியான ஷரீக் என்பாரை அநேகர் குறை கூறியுள்ளனர். அதை கூபா நகரத்தை சார்ந்த அபுல் யக்லான் என்ற உஸ்மான் பின் அபீர் என்பாரின் ஹதீஸ் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது.)

(அபூதாவூத்: 297)

113- بَابُ مَنْ قَالَ تَغْتَسِلُ مِنْ طُهْرٍ إِلَى طُهْرٍ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ، وحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي الْيَقْظَانِ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

فِي «الْمُسْتَحَاضَةِ تَدَعُ الصَّلَاةَ أَيَّامَ أَقْرَائِهَا، ثُمَّ تَغْتَسِلُ وَتُصَلِّي، وَالْوُضُوءُ عِنْدَ كُلِّ صَلَاةٍ»

قَالَ أَبُو دَاوُدَ: «زَاد عُثْمَانُ وَتَصُومُ وَتُصَلِّي»


AbuDawood-Tamil-297.
AbuDawood-Shamila-297.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.