தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-304

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 117

ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்யலாம்.

பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள் சூதக ரத்தப் போக்கு உள்ளவராக ஆனபோது அவருக்கு நபி (ஸல்) அவர்கள், இது மாதவிடாய் ரத்தம் எனில் அது அடையாளங்கண்டு கொள்ளப் படும் கரிய ரத்தமாகும். இந்த ரத்தம் உனக்கு வந்தால் நீ தொழுகை விட்டுவிடு. இது அல்லாத ரத்தம் வந்தால் நீ உலூச் செய்து தொழுது கொள் என்றார்கள். 

அறிவிப்பவர் : பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

எமக்கு இப்னு அபீ அதீ என்பார் தனது மனனத்தின் மூலம் அறிவிக்கும் போது உர்வா (அவர்களுக்கும் பாத்திமா அவர்களுக்கும் இடையில்) அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள் என்று அறிவிப்பாளர் இப்னுல் முஸன்னா கூறுகின்றார். (286 வது ஹதீஸின் குறிப்பை பார்க்கவும்).

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்: 

இந்த ஹதீஸை அபூ ஜஃபர் வழியாக ஹக்கம் மூலம் அறிவிக்கும் அலா பின் அல் முஸய்யிப் என்பாரிடமிருந்தும் ஷுஃபா விடமிருந்தும் அறிவிக்கப் படுகின்றது. இந்த அறிவிப்புகளில், நீ ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்து கொள் என்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து (மர்ஃபூவாக) அலா பின் அல் முஸய்யிப்பும் அபூஜஃபருடன் நிறுத்தி (மவ்கூஃபாக) ஷுஃபாவும் அறிவிக்கின்றனர். 

(அபூதாவூத்: 304)

117- بَابُ مَنْ قَالَ تَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ مُحَمَّدٍ يَعْنِي بْنَ عَمْرٍو، حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ فَاطِمَةَ بِنْتِ أَبِي حُبَيْشٍ

أَنَّهَا كَانَتْ تُسْتَحَاضُ فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ دَمُ الْحَيْضِ فَإِنَّهُ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ، فَإِذَا كَانَ ذَلِكَ فَأَمْسِكِي عَنِ الصَّلَاةِ، فَإِذَا كَانَ الْآخَرُ، فَتَوَضَّئِي وَصَلِّي»

قَالَ أَبُو دَاوُدَ: قَالَ ابْنُ الْمُثَنَّى، وَحَدَّثَنَا بِهِ ابْنُ أَبِي عَدِيٍّ حِفْظًا، فَقَالَ: عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ قَالَ أَبُو دَاوُدَ: وَرُوِيَ عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، وَشُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ أَبِي جَعْفَرٍ قَالَ: الْعَلَاءُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَوْقَفَهُ شُعْبَةُ عَلَى أَبِي جَعْفَرٍ «تَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ»


AbuDawood-Tamil-304.
AbuDawood-Shamila-304.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.