தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-312

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நான் ஹஜ்ஜுக்கு சென்றதும் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது நான் இறை நம்பிக்கையாளரின் அன்னையே! சம்ரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் மாதவிடாய் (காலத்தில் விட்ட தொழுகையை) பெண்கள் களாச் செய்ய வேண்டும் (திரும்பத் தொழ வேண்டும்) என்று பெண்களுக்கு கட்டளையிடு கின்றாரே? என்று வினவியதற்கு அவர்கள் அவ்வாறு பெண்கள் களா செய்ய வேண்டாம். நபி(ஸல்) அவர்களின் மனைவி யரில் எவரேனும் பேறுகால இரத்தப் போக்கின் போது நாற்பது இரவுகள் (தொழாமல்) இருப்பார்கள். பேறுகால ரத்தப்போக்கின் போது விடுபட்ட தொழுகையை களா செய்யும்படி அவருக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட மாட்டார்கள் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அஸ்தி கிளையைச் சார்ந்த முஸ்ஸா

அசத்திய்யா : இவருடைய பெயர் முஸ்ஸா என்பதாகும். இவர் உம்மு பஸ்ஸ என்ற இடுகுளி பெயரால் அழைக்கப் படுகிறார் என்று முஹம்மது பின் ஹாதம் அவர்கள் கூறுகின்றார்கள்.

(அபூதாவூத்: 312)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ يَعْنِي حُبِّي، حَدَّثَنَا [ص:84] عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ بْنِ نَافِعٍ، عَنْ كَثِيرِ بْنِ زِيَادٍ، قَالَ: حَدَّثَتْنِي الْأَزْدِيَّةُ يَعْنِي مُسَّةَ قَالَتْ

حَجَجْتُ فَدَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ فَقُلْتُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، إِنَّ سَمُرَةَ بْنَ جُنْدُبٍ يَأْمُرُ النِّسَاءَ يَقْضِينَ صَلَاةَ الْمَحِيضِ فَقَالَتْ: «لَا يَقْضِينَ كَانَتِ الْمَرْأَةُ مِنْ نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقْعُدُ فِي النِّفَاسِ أَرْبَعِينَ لَيْلَةً لَا يَأْمُرُهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَضَاءِ صَلَاةِ النِّفَاسِ»

قَالَ مُحَمَّدٌ يَعْنِي ابْنَ حَاتِم: وَاسْمُهَا مُسَّةُ تُكْنَى أُمَّ بُسَّةَ قَالَ أَبُو دَاوُدَ: كَثِيرُ بْنُ زِيَادٍ كُنْيَتُهُ أَبُو سَهْلٍ


AbuDawood-Tamil-312.
AbuDawood-Shamila-312.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.