அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், அஸ்மா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வருகையுற்று, அல்லாஹ்வின் தூதர் அவர் களே! எங்களில் ஒருவர் மாதவிடா யிலிருந்து துப்புரவானால் எப்படி குளிக்க வேண்டும்? என்று வினவிய போது, அதற்கு அவர்கள், அவர் எலந்த இலையும், தண்ணீரும் (கலந்து) எடுத்துக் கொண்டு உலூச் செய்யவேண்டும். பிறகு தனது தலையை கழுவவும், அதை தண்ணீர் அவரது முடியில் அடிப்பாகங்களுக்கு சென்றடையும் வரை தேய்க்க வேண்டும். பிறகு தனது உடலில் (தண்ணீர்) ஊற்ற வேண்டும். பிறகு பருத்தி அல்லது கம்பளித் துண்டைக் கொண்டு அவர் சுத்தம் செய்ய வேண்டும் என்று பதிலளித்தார்கள். அப்போது அஸ்மா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! அதைக் கொண்டு நான் எப்படி சுத்தம் செய்வது என்று வினவியதும், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடு கின்றார்கள் : இங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் எதை மறைமுகமாக குறிப் பிடுகின்றார்கள் என்பதை நான் புரிந்து கொண்டு அதை இரத்தம் கறையாகு மிடத்தில் (மறைவுறுப்பில்) இட்டுக் கொள்க! என்று அவருக்கு பதிலளித்தேன்.
அறிவிப்பாளர் :அன்னை ஆயிஷா (ரலி).
(அபூதாவூத்: 314)حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، أَخْبَرَنَا سَلَّامُ بْنُ سُلَيْمٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ
دَخَلَتْ أَسْمَاءُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ تَغْتَسِلُ إِحْدَانَا إِذَا طَهُرَتْ مِنَ الْمَحِيضِ؟ قَالَ: «تَأْخُذُ سِدْرَهَا وَمَاءَهَا فَتَوَضَّأُ، ثُمَّ تَغْسِلُ رَأْسَهَا، وَتَدْلُكُهُ حَتَّى يَبْلُغَ الْمَاءُ أُصُولَ شَعْرِهَا، ثُمَّ تُفِيضُ عَلَى جَسَدِهَا، ثُمَّ تَأْخُذُ فِرْصَتَهَا فَتَطَّهَّرُ بِهَا» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ أَتَطَهَّرُ بِهَا. قَالَتْ: عَائِشَةُ فَعَرَفْتُ الَّذِي يَكْنِي عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ لَهَا: تَتَبَّعِينَ بِهَا آثَارَ الدَّمِ
AbuDawood-Tamil-314.
AbuDawood-Shamila-314.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்