தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-316

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சபிய்யா பின்த் ஸஷபா, இப்றாஹீம் பின் முஹாஜிர், ஷுஃகா, தனது தந்தை வழியாக உபைதுல்லாஹ் பின் முஆத் அல்அன்பரி இந்த தொடர் வழியாக நபி (ஸல்) அவர்களிடம் அஸ்மா (ரலி) அவர்கள் வினவியபோது என்று இதன் அறிவிப்பாளர் மேலுள்ள ஹதீஸின் கருத்தை அறிவிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் கஸ்தூரி வாச மூட்டப்பட்ட (பருத்தி அல்லது கம்பளித்) துண்டு என்று பதிலளித்தார்கள். நான் அதைக்கொண்டு எப்படி சுத்தம் செய்வேன் என்று அவர் வினவியதும், நபி(ஸல்)அவர்கள் சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூய்மையான வன்) அதைக்கொண்டு நீ சுத்தம் செய்க! என்று கூறி ஒரு துணியைக் கொண்டு (வெட்கத்தினால் தனது முகத்தை) மூடிக் கொண்டார்கள். மேலும் இதன் அறிவிப் பாளர், அஸ்மா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஜனாபத்திற்காக குறிப்பதை பற்றி கேட்டபோது, நீ உனக்குரிய தண்ணீரை எடுத்து அழகிய முறையிலும் நிறைவான விதத்திலும் சுத்தம் செய்க! பிறகு உனது தலைக்கு நீர் ஊற்றி, பிறகு உனது தலை(முடியின்) அடிப்பாகங்களில் அது சேரும்வரை அதை நீ தேய்ப்பாயாக! என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என்றும், பெண்களில் அன்சாரிப் பெண்கள் மிகவும் சிறந்தவர்கள்! மார்க்கத்தைப் பற்றி விளக்கம் கேட்பதற்கும், மேலும் அதில் அறிவு பெறுவதற்கும் நாணம் அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கவில்ல என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பாராட்டு தெரிவித்தார்கள் என்றும் கூடுதலாக அறிவிக்கின்றார்.

இதை போன்ற ஹதீஸை இமாம் புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா ஆகியோர் தனது நூல்களில் பதிவாக்கியுள்ளனர்.

(அபூதாவூத்: 316)

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ يَعْنِي ابْنَ مُهَاجِرٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ

أَنَّ أَسْمَاءَ سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَاهُ قَالَ: «فِرْصَةً مُمَسَّكَةً». قَالَتْ: كَيْفَ أَتَطَهَّرُ بِهَا قَالَ: «سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِي بِهَا وَاسْتَتِرِي بِثَوْبٍ»، وَزَادَ وَسَأَلَتْهُ عَنْ الْغُسْلِ مِنَ الجَنَابَةِ فَقَالَ: «تَأْخُذِينَ مَاءَكِ فَتَطَّهَّرِينَ أَحْسَنَ الطُّهُورِ وَأَبْلَغَهُ، ثُمَّ تَصُبِّينَ عَلَى رَأْسِكِ الْمَاءَ، ثُمَّ تَدْلُكِينَهُ حَتَّى يَبْلُغَ شُؤُونَ رَأْسِكِ، ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الْمَاءَ» قَالَ: وَقَالَتْ عَائِشَةُ: «نِعْمَ النِّسَاءُ نِسَاءُ الْأَنْصَارِ لَمْ يَكُنْ يَمْنَعُهُنَّ الْحَيَاءُ أَنْ يَسْأَلْنَ عَنِ الدِّينِ، وَأَنْ يَتَفَقَّهْنَ فِيهِ»


AbuDawood-Tamil-316.
AbuDawood-Shamila-316.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.