தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-317

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 123

தயம்மும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸைத் பின் ஆயிஷா (ரலி) அவர்களையும் இன்னும் சிலரையும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தொலைத்து விட்ட கழுத்து மாலையை தேடுவதற்காக அனுப்பி வைத்தார்கள். அப்போது தொழுகை நேரமாகி (தண்ணீர் கிடைக்காததால்) உலூவின்றியே அவர்கள் தொழுது விட்டனர். எனவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்ததும் இதை அவர்களிடம் முறையிட்ட போது, தயம்மம் தொடர்பான வசனம் இறங்கியது.

அறிவிப்பாளர் :அன்னை ஆயிஷா (ரலி)

இப்னு (முஹம்மது) நுபைலி அவர்கள் தனது அறிவிப்பில், அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக! நீங்கள் வெறுக்கின்ற எந்த காரியமும் உங்களை வந்தணுகுவ தில்லை. அதில் அல்லாஹ் முஸ்லிம்களுக் கும், உங்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தே தவிர! என்று உஸைத் பின் ஹுலைர் அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி கூறினார்கள் என்று கூடுதலாக அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 317)

123- بَابُ التَّيَمُّمِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، أَخْبَرَنَا عَبْدَةُ الْمَعْنَى وَاحِدٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ

بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ وَأُنَاسًا مَعَهُ فِي طَلَبِ قِلَادَةٍ أَضَلَّتْهَا عَائِشَةُ، «فَحَضَرَتِ الصَّلَاةُ فصَلَّوْا بِغَيْرِ وُضُوءٍ، فَأَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا ذَلِكَ لَهُ، فَأُنْزِلَتْ آيَةُ التَّيَمُّمِ» زَادَ ابْنُ نُفَيْلٍ: فَقَالَ لَهَ أُسَيْدُ بْنُ حُضَيْر: يَرْحَمُكِ اللَّهُ مَا نَزَلَ بِكِ أَمْرٌ تَكْرَهِينَهُ إِلَّا جَعَلَ اللَّهُ لِلْمُسْلِمِينَ، وَلَكِ فِيهِ فَرَجًا


AbuDawood-Tamil-317.
AbuDawood-Shamila-317.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.