தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-320

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் உளலாதி ஜைவி என்ற இடத்தில் ஓய்வு எடுப்பதற்காக இரவு தங்கினார்கள். அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களும் இருந்தனர். ஜஸ்ஃலிபார் என்ற இடத்தில் அன்னையாரின் கழுத்து மாலை அறுந்து விழுந்து விட்டது. இதனால் அவரது கழுத்து மாலையை தேடும் பணி, மக்களை அவர்களிடம் தண்ணீரில்லாத நிலையில் வைகறை வெளுக்கும் வரை (புறப்படமுடி யாமல்) தடுத்து விட்டது. இதனால் அபூபக்கர்(ரலி) அவர்கள் அன்னை ஆயி ஷா(ரலி) மீது கோபம் கொண்டு, மக்களை அவர்களிடம் தண்ணீர் இல்லாத சமயத்தில் (தொழமுடியாமல்)தடுத்து நிறுத்திவிட்டாயே என்று கூறினார்கள். அவ்வமயம் அல்லாஹ் தஆலா தனது திருத்தூதர் (ஸல்) அவர் களுக்கு தூய்மையான மண்ணில் சுத்தம் செய்கின்ற சலுகையை இறக்கியருளினான். எனவே, முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தயம்மம் செய்யக்) கிளம்பி தங்கள் கைகளை மண்ணில் அடித் தனர். பிறகு தங்கள் கைகளை மண்ணிலி ருந்து எதையும் அள்ளாமல் உயர்த்தி அவற்றை கொண்டு தங்களது முகங்களை யும், தங்களது (வெளிப்பக்க) கைகளை முழங்கைகள் வரையிலும் தங்களது உட்பக்க கைகளை அக்குள் வரையிலும் தடவிக் கொண்டார்கள் என்று அம்மார் பின் யாஸிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸை மக்கள் (ஹதீஸ் கலையினர்) சட்டை செய்யவில்லை என்று தனது ஹதீஸில் இப்னு ஷிஹாப் குறிப்பிடுகின்றார் என்று (முஹம்மது) இப்னு யஹ்யா தனது அறிவிப்பில் கூடுதலாக தெரிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

இவ்வாறே இப்னு இஸ்ஹாக் அறிவிக் கும் போது அந்த அறிவிப்பில் (அம்மா ருக்கும் உபைத்துல்லாஹ் பின் அப்துல் லாஹ்வுக்கும் இடையில்) இப்னு அவர்களி டமிருந்து என்று குறிப்பிடுகின்றார். மேலும் இவர் யூனுஸ் (317 ஹதீஸ்) அவர் கள் தெரிவிப்பது போன்று (மண்ணில்) இரண்டு முறை அடித்தல் என்றே தெரிவிக்கின்றார். ஜுஹ்ரியிடமிருந்து இதை மஃமர் அவர்கள் இரண்டு முறை அடித்தல் என்றே அறிவிக்கின்றார்.

அம்மார் அவர்களிடமிருந்து தன் தந்தை வாயிலாக உபைத்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் அறிவிக்கின்றார் என்று ஜுஹ்ரி வாயிலாக மாலிக் அறிவிக்கின்றார். இவ்(மாலிக் அறிவித்த)வாறே ஜுஹ்ரி வாயிலாக அபூஉவைஸ் அறிவிக்கின்றார்.

இந்த ஹதீஸ் அறிவிப்பில் இப்னு உஐனா அவர்கள் ஒரு தடவை தன் தந்தை வாயிலாக அறிவிக்கும் உபைத்துல்லாஹ் விடமிருந்து என்றும் மறுதடவை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கும் உபைத்துல்லாஹ்விடமிருந்து என்றும் சந்தேகம் கொண்டவராக அறிவிக்கின்றார்.

இப்னு உஐனா அவர்கள் மேற்கூறிய இந்த ஹதீஸ் அறிவிப்பிலும், தான் ஜுஹ்ரி அவர்களிடமிருந்து (நேரடியாகவோ அல்லது ஊடே ஒரு அறிவிப்பாள ரிடமிருந்தோ என்று) செவியுற்றதிலும் தடுமாறுகின்றார்.

(அபூதாவூத்: 320)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ فِي آخَرِينَ قَالُوا: حَدَّثَنَا يَعْقُوبُ، أَخْبَرَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَّسَ بِأَوَّلَاتِ الْجَيْشِ وَمَعَهُ عَائِشَةُ فَانْقَطَعَ عِقْدٌ لَهَا مِنْ جَزْعِ ظَفَارِ، فَحُبِسَ النَّاسُ ابْتِغَاءَ عِقْدِهَا ذَلِكَ حَتَّى أَضَاءَ الْفَجْرُ، وَلَيْسَ مَعَ النَّاسِ مَاءٌ فَتَغَيَّظَ عَلَيْهَا أَبُو بَكْرٍ وَقَالَ: حَبَسْتِ النَّاسَ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى عَلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رُخْصَةَ التَّطَهُّرِ بِالصَّعِيدِ الطَّيِّبِ، فَقَامَ الْمُسْلِمُونَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَرَبُوا بِأَيْدِيهِمْ إِلَى الْأَرْضِ، ثُمَّ رَفَعُوا أَيْدِيَهُمْ، وَلَمْ يَقْبِضُوا مِنَ التُّرَابِ شَيْئًا، فَمَسَحُوا بِهَا وُجُوهَهُمْ وَأَيْدِيَهُمْ إِلَى الْمَنَاكِبِ، وَمِنْ بِطُونِ أَيْدِيهِمْ إِلَى الْآبَاطِ ” زَادَ ابْنُ يَحْيَى فِي حَدِيثِهِ قَالَ ابْنُ شِهَابٍ فِي حَدِيثِهِ: «وَلَا يَعْتَبِرُ بِهَذَا النَّاسُ»، قَالَ أَبُو دَاوُدَ: وَكَذَلِكَ رَوَاهُ ابْنُ إِسْحَاقَ قَالَ فِيهِ: عَنِ ابْنِ عَبَّاسٍ «وَذَكَرَ ضَرْبَتَيْنِ». كَمَا ذَكَرَ يُونُسُ، وَرَوَاهُ مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ «ضَرْبَتَيْنِ»، وَقَالَ مَالِكٌ: عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ عَمَّارٍ، وَكَذَلِكَ قَالَ أَبُو أُوَيْسٍ: عَنِ الزُّهْرِيِّ، وَشَكَّ فِيهِ ابْنُ عُيَيْنَةَ قَالَ: مَرَّةً عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَوْ عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَمَرَّةً قَالَ: عَنْ أَبِيهِ، وَمَرّةً قَالَ: عَنِ ابْنِ عَبَّاسٍ اضْطَرَبَ ابْنُ عُيَيْنَة فِيهِ، وَفِي سَمَاعِهِ مِنَ الزُّهْرِيِّ وَلَمْ يَذْكُرْ أَحَدٌ مِنْهُمْ فِي هَذَا الْحَدِيثِ «الضَّرْبَتَيْنِ» إِلَّا مَنْ سَمَّيْتُ


AbuDawood-Tamil-320.
AbuDawood-Shamila-320.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.