தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-321

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஹகீக் அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

நான் அப்துல்லஹ் (பின் மஸ்வூத்) (ரலி) அவர்களுக்கும் அபூமூஸா (ரலி) அவர்களுக்கும் மத்தியில் அமர்ந்து இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி) அவர்கள் (அப்துல்லாஹ்வை நோக்கி) அபூஅப்துர் ரஹ்மான் அவர்களே! ஒருவர் ஜுனுபாகி, ஒரு மாதம் வரை தண்ணீர் கிடைக்கவில்லை எனில், அவர் தயம்மம் செய்து கொள்ளலாம் என்று கருதுகின்றீர்களா? என்று வினவினார்கள். அதற்கு அவர்கள் ஒரு மாதம் வரை தண்ணீர் கிடைக்கவில்லை என்றாலும் அவர் தயம்மம் செய்யவேண்டாம்! என்று பதிலுரைத்தார்கள். உடனே அபூமூஸா (ரலி)அவர்கள் அப்படியானால் அல் மாயிதா என்ற (5ம்) அத்தியாயத்தில் நீங்கள் (சுத்தம் செய்வதற்குரிய) நீரை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் பரிசுத்தமான மண்ணைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள் என்ற (6ம்) வசனத்தை என்ன செய்யப் போகிறீர்கள்? என்று வினவியதும் அப்துல்லாஹ் அவர்கள், இதில் அவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுவிட்டால், அவர்களுக்கு குளிர்ந்துவிடும் போது அவர்கள் மண்ணில் தயம்மம் செய்ய துவங்கி விடுவார்கள்! என்று பதிலளித்தார்கள். அதற்காகத் தான் நீங்கள் இதை வெறுக்கின்றீர்களா? என்று அபூமூஸா(ரலி) அவர்கள் கேட்டபோது, அவர்கள் ஆம் என்றார்கள். பிறகு அபூமூஸா(ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர் களிடம் அம்மார் (ரலி) அவர்கள் என்னை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தேவைக்காக அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் ஜுனுபாகி விட்டேன். அப்போது தண்ணீர் கிடைக்காததால் மிருகம் (தரையில்) புரண்டெழுவது போன்று நான் (சுத்தமாக) மண்ணில் புரண்டெழுந்தேன். பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, இதை அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் (மண்ணில் புரள தேவையில்லை) நீ இவ்வாறு செய்தால் போதுமானதாகும் என்று சொல்லி தனது கையை மண்ணில் அடித்து உதறி தனது இடது கையை வலது கையின் மீதும் தன் வலது கையை இடது கையின் (இப்படி) இரு முன்னங்கைளையும் ஒன்றோடு ஒன்றாக தட்டி பிறகு முகத்தில் தடவி னார்கள் என்று கூறியதை நீங்கள் செவியுற வில்லையா? என்று வினவியதும் அப்துல் லாஹ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் அம்மார் (ரலி) அவர்களின் இந்த கூற்றைக் கொண்டு திருப்தியடையவில்லை என்று அறியவில்லையா? என்று கேட்டார்கள்.

இதை புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகியோர் தனது நூல்களில் பதிவாக்கியுள்ளனர்.)

(அபூதாவூத்: 321)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْأَنْبَارِيُّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ الضَّرِيرُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ قَالَ

كُنْتُ جَالِسًا بَيْنَ عَبْدِ اللَّهِ، وَأَبِي مُوسَى، فقَالَ أَبُو مُوسَى: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلًا أَجْنَبَ فَلَمْ يَجِدِ الْمَاءَ شَهْرًا أَمَا كَانَ يَتَيَمَّمُ؟ فَقَالَ: لَا، وَإِنْ لَمْ يَجِدِ الْمَاءَ شَهْرًا. فَقَالَ أَبُو مُوسَى: فَكَيْفَ تَصْنَعُونَ بِهَذِهِ الْآيَةِ الَّتِي فِي سُورَةِ الْمَائِدَةِ {فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا} [النساء: 43] فَقَالَ عَبْدُ اللَّهِ: لَوْ رُخِّصَ لَهُمْ فِي هَذَا لَأَوْشَكُوا إِذَا بَرَدَ عَلَيْهِمُ الْمَاءُ أَنْ يَتَيَمَّمُوا بِالصَّعِيدِ. فَقَالَ لَهُ أَبُو مُوسَى: وَإِنَّمَا كَرِهْتُمْ هَذَا لِهَذَا. قَالَ: نَعَمْ. فَقَالَ لَهُ أَبُو مُوسَى: أَلَمْ تَسْمَعْ قَوْلَ عَمَّارٍ لِعُمَر بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ فَأَجْنَبْتُ، فَلَمْ أَجِدَ الْمَاءَ فَتَمَرَّغْتُ فِي الصَّعِيدِ كَمَا تَتَمَرَّغُ الدَّابَّةُ، ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَصْنَعَ هَكَذَا فَضَرَبَ بِيَدِهِ عَلَى الْأَرْضِ فَنَفَضَهَا، ثُمَّ ضَرَبَ بِشِمَالِهِ عَلَى يَمِينِهِ وَبِيَمِينِهِ عَلَى شِمَالِهِ عَلَى الْكَفَّيْنِ، ثُمَّ مَسَحَ وَجْهَهُ» فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ: أَفَلَمْ تَرَ عُمَرَ لَمْ يَقْنَعْ بِقَوْلِ عَمَّارٍ


AbuDawood-Tamil-321.
AbuDawood-Shamila-321.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.