அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா அவர் கள் அறிவிக்கின்றார்கள் : நான் உமர் (ரலி) அவர்களிடம் வீற்றிருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, நாங்கள் ஓரிடத்தில்ஒரு மாதம் அல்லது இரு மாதங் கள் தங்குகின்றறோம். (நாங்கள் எவ்வாறு தொழுவது) என்று வினவிய போது, உமர் (ரலி)அவர்கள் என்னை பொறுத்தவரையில் தண்ணீர் கிடைக்கின்ற வரை நான் தொழ மாட்டேன் என்று பதிலளித்தார்கள். அப் போது அம்மார்(ரலி) அவர்கள் இறை நம்பிக்கையாளரின் தலைவர் அவர்களே! உங்களுக்கு நினைவில்லையா? நானும், நீங் களும் ஒட்டகம் மேய்ப்பதில் ஈடுபட்டி ருக்கும் போது எமக்கு ஜனாபத் ஏற்பட்டு விட்டது. அதனால் நான் (மண்ணில்) புரண்டெழுந்தேன். நாம் நபி (ஸல்) அவர் களிடம் வந்ததும், நான் இதை அவர் களிடம் தெரிவித்தேன். அப்போது அவர் கள் நீ இவ்வாறு செய்வது உனக்கு போது மானதாகும் என்று கூறி, தனது இரு கை களையும் மண்ணில் அடித்தார்கள். பிறகு அவ்விரண்டு கைகளையும் ஊதினார்கள். பிறகு அவ்விரண்டையும் பாதி முழுங்கை கள் வரை தடவினார்கள் என்று கூறினார் கள். அதற்கு உமர்(ரலி) அவர்கள், அவ்வா றன்று அல்லாஹ் மீது ஆணையாக! இது விஷயத்தில் நீர் எதை நோக்கி திரும்பி விட்டீரோ அதை நோக்கியே உம்மை திருப்பி விடுகிறோம் (இது உன் விருப்பத்தை சார்ந்தது) என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா
இந்த ஹதீஸை இமாம் புகாரி, முஸ் லிம், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகியோ ரும் தமது நூல்களில் பதிவாக்கியுள்ளார்கள்.
(அபூதாவூத்: 322)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى قَالَ
كُنْتُ عِنْدَ عُمَرَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ: إِنَّا نَكُونُ بِالْمَكَانِ الشَّهْرَ وَالشَّهْرَيْنِ فَقَالَ عُمَرُ: أَمَّا أَنَا فَلَمْ أَكُنْ أُصَلِّي حَتَّى أَجِدَ الْمَاءَ. قَالَ: فَقَالَ عَمَّارٌ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَمَا تَذْكُرُ إِذْ كُنْتُ أَنَا وَأَنْتَ فِي الْإِبِلِ، فَأَصَابَتْنَا جَنَابَةٌ، فَأَمَّا أَنَا، فَتَمَعَّكْتُ، فَأَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَقُولَ هَكَذَا، وَضَرَبَ بِيَدَيْهِ إِلَى الْأَرْضِ، ثُمَّ نَفَخَهُمَا، ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى نِصْفِ الذِّرَاعِ» فَقَالَ عُمَرُ: يَا عَمَّارُ اتَّقِ اللَّهَ، فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، إِنْ شِئْتَ وَاللَّهِ لَمْ أَذْكُرْهُ أَبَدًا، فَقَالَ عُمَرُ: كَلَّا وَاللَّهِ لَنُوَلِّيَنَّكَ مِنْ ذَلِكَ مَا تَوَلَّيْتَ
AbuDawood-Tamil-322.
AbuDawood-Shamila-322.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்