இந்த சம்பவத்தை அம்மார் அவர்களிடமிருந்து தன் தந்தை வாயிலாக (ஸயீத்) இப்னு அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா அறிவிக்கின்ற போது, உனக்கு இதுவே போதுமானதாகும் என்றும் மேலும் நபி (ஸல்) அவர்கள் தனது கையை மண்ணில் அடித்து, பிறகு அக்கையில் ஊதி அதைக் கொண்டு தனது முகத்தையும், தனது முன்னங்கைகளையும் தடவினார்கள் என்று குறிப்பிடுகின்றார். அறிவிப்பாளர் ஸலமா அவர்கள் சந்தேகம் கொண்டு இதில் முட்டுக் கைகள் வரை அல்லது முன்னங்கைகள் வரை என்று இடம் பெற்றுள்ளதா என்று எனக்கு தெரியாது என்ற குறிப்பிடுகின்றார்.
அறிவிப்பாளர் : அம்மார் (ரலி).
(அபூதாவூத்: 324)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ جَعْفَرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ عَمَّارٍ بِهَذِهِ الْقِصَّةِ، فَقَالَ
«إِنَّمَا كَانَ يَكْفِيكَ وَضَرَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ إِلَى الْأَرْضِ، ثُمَّ نَفَخَ فِيهَا، وَمَسَحَ بِهَا وَجْهَهُ وَكَفَّيْهِ» شَكَّ سَلَمَةُ وَقَالَ: «لَا أَدْرِي فِيهِ إِلَى الْمِرْفَقَيْنِ، يَعْنِي أَوْ إِلَى الْكَفَّيْنِ»
AbuDawood-Tamil-324.
AbuDawood-Shamila-324.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்