தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-326

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அம்மார் (ரலி) அவர்களிடமிருந்து தன் தந்தை வழியாக ஸயீத் பின் அப்துர் ரஹ் மான் பின் அப்ஸா அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸில் உனது இரு கைகளையும் மண்ணில் அடித்து இவ்விரண்டைக் கொண்டு உமது முகத்தையும், உமது முன்னங்கைகளையும் நீ தடவிக் கொள் உமக்கு போதுமானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று குறிப்பிட்டு இந்த ஹதீஸை தொடர்கிறார்.

அறிவிப்பாளர் : அம்மார் (ரலி) 

அம்மார் (ரலி) அவர்கள் உரையாற்று வதை நான் செவியுற்றேன். ஆனால் அவர்கள் ஊதவில்லை என்று தான் குறிப்பிட்டார்கள். என ஸயீத் பின் அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா கூறியதாக மாலிக் மூலம் ஹுசைன் வழியாக இதை ஷுஃபா அறிவிக்கின்றார். தனது இரு முன்னங்கை களையும் மண்ணில் அடித்து ஊதினார்கள் என்று அவர் கூறியதாக இந்த ஹதீஸில் ஹகம் மூலம் ஷுஃபா வாயிலாக ஹுசைன் பின் முஹம்மது குறிப்பிடுகின்றார்.

(அபூதாவூத்: 326)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ قَالَ: حَدَّثَنِي الْحَكَمُ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ عَمَّارٍ فِي هَذَا الْحَدِيثِ قَالَ

فَقَالَ يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَضْرِبَ بِيَدَيْكَ إِلَى الْأَرْضِ، فَتَمْسَحَ بِهِمَا وَجْهَكَ وَكَفَّيْكَ»، وَسَاقَ الْحَدِيثَ

قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ شُعْبَةُ، عَنْ حُصَيْنٍ، عَنْ أَبِي مَالِكٍ قَالَ: سَمِعْتُ عَمَّارًا يَخْطُبُ بِمِثْلِهِ إِلَّا أَنَّهُ قَالَ: «لَمْ يَنْفُخْ». وَذَكَرَ حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ فِي هَذَا الْحَدِيثِ قَالَ: «ضَرَبَ بِكَفَّيْهِ إِلَى الْأَرْضِ وَنَفَخَ»


AbuDawood-Tamil-326.
AbuDawood-Shamila-326.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.