நபி (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றிவிட்டு வந்துகொண்டிருந்த போது ஒரு மனிதர் ஜமல் என்ற கிணற்றுக்கு அருகே அவர்களை சந்தித்து சலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் சுவற்றுக்கு அருகே வந்து கைகளை சுவற்றில் வைத்து பிறகு அதை தன் முகத்திலும் கைகளிலும் தடவிக்கொண்டார்கள். பிறகு அம்மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில்சலாம் கூறினார்கள்..
அறிவிப்பவர் : அபுல் ஜுஹைம் (ரலி)
…..
பாடம் : 124
ஊரில் வசிப்பவர் தயம்மும் செய்தல்.
நானும், நபி (ஸல்) அவர்களின் மனைவி மைமூனா (ரலி) அவர்களின் அடிமையான அப்துல்லாஹ் பின் யஸார் அவர்களும் புறப்பட்டு அபுல்ஜுஹைம் பின் அல்ஹாரிஸ் பின் சிம்மா அவர்களிடம் சென்றோம். அப்போது அபுல் ஜுஹைம் அவர்கள் (பின்வருமாறு) அறிவித்தார்கள். பஃர் ஜமல் என்ற இடத்திலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து கொண்டிருக்கும் போது, அவர்களை ஒருவர் சந்தித்து, அவர்களுக்கு ஸலாம் உரைத்தார். நபி (ஸல்) அவர்கள் பதில் கூறாமல் ஒரு சுவர் அருகே வந்து தனது முகத்தையும் தனது இரு கைகளையும் (தயம்மம் செய்து) தடவினார்கள். பின்பு அவருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். இவ்வாறு இப்னு அவர்கள் கூற அப்பாஸ் அவர்களிடமிருந்து செவியுற்றதாக அறிவிப்பவர் அவர்களுடைய அடிமை உமைர் அவர்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமை உமைர்
(குறிப்பு : இந்த ஹதீஸை இமாம் புகாரி, நஸயீ ஆகியோர் தமது நூல்களில் பதிவு செய்துள்ளனர். இமாம் முஸ்லிம் அவர்கள் இதை முன்கதிஃ ஆக பதிவு செய்துள்ளார்கள்.)
(அபூதாவூத்: 329)124- بَابُ التَّيَمُّمِ فِي الْحَضَرِ
حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، أَخْبَرَنَا أَبِي، عَنْ جَدِّي، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ عُمَيْرٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ:
أَقْبَلْتُ أَنَا وَعَبْدُ اللَّهِ بْنُ يَسَارٍ مَوْلَى مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي الْجُهَيْمِ بْنِ الْحَارِثِ بْنِ الصِّمَّةِ الْأَنْصَارِيِّ قَالَ أَبُو الْجُهَيْمِ: «أَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ بِئْرِ جَمَلٍ فَلَقِيَهُ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ السَّلَامَ حَتَّى أَتَى عَلَى جِدَارٍ، فَمَسَحَ بِوَجْهِهِ وَيَدَيْهِ، ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلَامَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-280.
Abu-Dawood-Shamila-329.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-278.
சமீப விமர்சனங்கள்