தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-33

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது வலது கை அவர்களது தூய்மைக் காகவும் ‎‎(உலூக்காகவும்) அவர்களது உணவுக்காகவும் ஆயிற்று. அவர்களது இடதுகை(மல, ‎ஜலம் கழித்தால்) சுத்தம் செய்வதற்காகவும் அசுத்தமானவற்றிற் காகவும் ஆயிற்று ‎என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.‎

‎(இரண்டாம் அறிவிப்பாளரான இப்றாஹீம் அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) ‎அவர்களிடமிருந்து எதையும் செவியுறவில்லை. எனவே இந்த ஹதீஸ் முன்கதிஃ ‎என்ற வகையைச் சார்ந்ததாகும். இவர் இதே கருத்தை அன்னை ஆயிஷா (ரலி) ‎அவர்களிடமிருந்து அஸ்வத் வழியாக அறிவிக்கின்றார். இதை அன்னை ஆயிஷா ‎‎(ரலி) அவர்களிடமிருந்து மஸ்ரூக் வழியாக ஆடை என்ற பாடத்தில் அறிவிக்கின்றார்.)‎

‎(குறிப்பு : இந்த அமைப்புத் தொடரின் படியே இதை இமாம் புகாரி, முஸ்லிம், நஸயீ, ‎இப்னு மாஜா ஆகியோர் தமது நூல்களில் பதிவு செய்துள்ளனர்.)‎

(அபூதாவூத்: 33)

حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، حَدَّثَنِي عِيسَى بْنُ يُونُسَ، عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ

«كَانَتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْيُمْنَى لِطُهُورِهِ وَطَعَامِهِ، وَكَانَتْ يَدُهُ الْيُسْرَى لِخَلَائِهِ، وَمَا كَانَ مِنْ أَذًى»


AbuDawood-Tamil-33.
AbuDawood-Shamila-33.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.