நாபிஉ அறிவிக்கின்றார்கள். ஒரு தேவையை முன்னிட்டு நான் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று கொண்டிருந்த போது இப்னு உமர் (ரலி) அவர்கள் தன் தேவையை நிறைவேற்றி விட்டு அன்றைய தினம் அவர்கள் அறிவித்த ஹதீஸ் இதுதான் : சிறுநீர் அல்லது மலம் கழித்து விட்டு திரும்பிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒருவர் ஒரு குறுகிய தெருவில் கடந்து சென்ற போது அவர்களுக்கு அவர் ஸலாம் சொன்னார். ஆனால் அவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறவில்லை. அந்த தெருவில் (பார்வையை விட்டும்) மறைகின்ற தருவாயில் தனது இரு கைகளை சுவரில் அடித்து அவ்விரண்டைக் கொண்டு தனது முகத்தை தடவினார்கள். பிறகு மீண்டும் ஒரு தடவை அடித்து அவ்விரண்டைக் கொண்டு தனது முகத்தைத் தடவினார்கள். பிறகு மீண்டும் ஒரு தடவை அடித்து தனது முழங்கைகளை தடவினார்கள். பின்பு அம்மனிதருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். மேலும் அவரிடம், நான் சுத்தமில்லாமல் இருந்தேன் என்பதை தவிர உமது ஸலாமுக்கு பதில் கூறுவதைவிட்டும் என்னை வேறெதுவும் தடுக்கவில்லை என்று (விளக்கம்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : நாபிஃஉ
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் : முஹம்மது பின் சாபித் அவர்கள் தயம்மம் உடைய பாடத்தில் முன்கரான ஹதீஸை அறிவிக்கின்றார் என்று இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
இமாம் அபூதாவூத் குறிப்பிட்டதாக இப்னு குறிப்பிடுகின்றார் :
நபி (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு முறை அடித்ததாக அறிவிக்கும் இந்த செய்தியில் முஹம்மது பின் ஸாபித் அவர்களுக்கு யாரும் உடன் படவில்லை. அவர்கள் எல்லோரும் இதை இப்னு உமர் (ரலி) அவர்களது செயலாக அறிவிக்கின்றனர்.
(அபூதாவூத்: 330)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الْمَوْصِلِيُّ أَبُو عَلِيٍّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ ثَابِتٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا نَافِعٌ قَالَ:
انْطَلَقْتُ مَعَ ابْنِ عُمَرَ فِي حَاجَةٍ إِلَى ابْنِ عَبَّاسٍ فَقَضَى ابْنُ عُمَرَ حَاجَتَهُ فَكَانَ مِنْ حَدِيثِهِ يَوْمَئِذٍ أَنْ قَالَ: مَرَّ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سِكَّةٍ مِنَ السِّكَكِ، وَقَدْ خَرَجَ مِنْ غَائِطٍ أَوْ بَوْلٍ فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتَّى إِذَا كَادَ الرَّجُلُ أَنْ يَتَوَارَى فِي السِّكَّة «ضَرَبَ بِيَدَيْهِ عَلَى الْحَائِطِ وَمَسَحَ بِهِمَا وَجْهَهُ، ثُمَّ ضَرَبَ ضَرْبَةً أُخْرَى فَمَسَحَ ذِرَاعَيْهِ، ثُمَّ رَدَّ عَلَى الرَّجُلِ السَّلَامَ» وَقَالَ: «إِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرُدَّ عَلَيْكَ السَّلَامَ إِلَّا أَنِّي لَمْ أَكُنْ عَلَى طُهْرٍ»
قَالَ أَبُو دَاوُدَ: ” سَمِعْت أَحْمَدَ بْنَ حَنْبَلٍ يَقُولُ: رَوَى مُحَمَّدُ بْنُ ثَابِتٍ حَدِيثًا مُنْكَرًا فِي التَّيَمُّمِ ” قَالَ ابْنُ دَاسَةَ: قَالَ أَبُو دَاوُدَ: لَمْ يُتَابَعْ مُحَمَّدُ بْنُ ثَابِتٍ فِي هَذِهِ الْقِصَّةِ عَلَى «ضَرْبَتَيْنِ» عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَوَوْهُ فِعْلَ ابْنِ عُمَرَ
Abu-Dawood-Tamil-330.
Abu-Dawood-TamilMisc-280.
Abu-Dawood-Shamila-330.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்