பனு ஆமிர் கிளைகளில் ஒருவர் அறிவிக்கின்றார்:
நான் இஸ்லாத்தை தழுவியதும் என்னுடைய மார்க்க(த்தைப் பற்றிய அறியாமை)ம் என்னை கவலை கொள்ள வைத்தது. இதனால் நான் அபூதர் அவர்களிடம் (மார்க்கத்தை தெரிந்து கொள்வதற்காக) வந்தேன். அப்போது அபூதர் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள் : நான் மதீனா (எனக்கு ஒத்துக் கொள்ளாததால்)வை வெறுத்தேன். எனவே எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில ஒட்டகங்களையும், ஆடுகளையும் (எடுத்துக் கொண்டு செல்லும்படி) உத்தரவிட்டு, அவற்றின் பாலை பருகும்படி கூறினார்கள். இங்கு அறிவிப்பாளர் ஹம்மாத் பாலுக்கு பதிலாக சிறுநீர் என்று கூறினாரா? என்று சந்தேகமடைகின்றேன் என்று குறிப்பிடுகின்றார். அபூதர் தொடர்ந்து கூறுகின்றார்கள் : எனவே நான் தண்ணீர் உள்ள பகுதியை விட்டும் நான் தூரமாகி விட்டேன். என் குடும்பம் என்னோடு தான் இருந்தது. அப்போது என்னை ஜனாபத் தீண்டி விடும்போது நான் சுத்தமின்றியே தொழுவேன். பிறகு நான் நண்பகலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்கள் பள்ளியின் நிழலில் தனது தோழர்களின் குழுவினருடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதர் ! தானே? என்று வினவியதும் நான் ஆம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே நான் நாசமாகி விட்டேன் என்று பதிலளித்தேன். அவர்கள் உன்னை நாசமாக்கியது எது? என்று வினவியதும், நான் தண்ணீர் உள்ள பகுதியை விட்டும் தூரமாகி விட்டேன். என்னுடைய குடும்பம் என்னுடனே இருந்தது. எனவே என்னை ஜனாபத் தீண்டிவிடும்போது நான் சுத்தமின்றியே தொழுதேன் என்று பதிலளித்தேன். உடனே எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீருக்கு உத்தரவிட்டார்கள். முழுவதும் நிரம்பியிராத தளும்புகின்ற ஒரு பாத்திரத்தில் கருத்த அடிமைப்பெண் நீர் கொண்டு வந்தாள். நான் ஒரு ஒட்டகைக்கு அருகில் மறைந்து கொண்டு குளித்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீ பத்தாண்டுகள் வரை தண்ணீரை பெற்றுக் கொள்ளவில்லை என்றாலும் பரிசுத்தமான மண்ணே தூய்மை (அளிக்கும் பொருள்) ஆகும். எனவே நீரை பெற்றுக் கொண்டால் அதை உன் உடலில் தழுவச் செய் என்று சொன்னார்கள் என மூஸா பின் இஸ்மாயில் அறிவிக்கின்றார்கள்.
(அபூதாவூத்: 333)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، أَخْبَرَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي عَامِرٍ قَالَ
دَخَلْتُ فِي الْإِسْلَامِ فَأَهَمَّنِي دِينِي، فَأَتَيْتُ أَبَا ذَرٍّ فَقَالَ: أَبُو ذَرٍّ إِنِّي اجْتَوَيْتُ الْمَدِينَةَ، فَأَمَرَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَوْدٍ وَبِغَنَمٍ فَقَالَ لِي: «اشْرَبْ مِنْ أَلْبَانِهَا» – قَالَ حَمَّادٌ: وَأَشُكُّ فِي أَبْوَالِهَا، هَذَا قَوْلُ حَمَّادٍ – فَقَالَ أَبُو ذَرٍّ: فَكُنْتُ أَعْزُبُ عَنِ الْمَاءِ، وَمَعِي أَهْلِي فَتُصِيبُنِي الْجَنَابَةُ فَأُصَلِّي بِغَيْرِ طَهُورٍ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنِصْفِ النَّهَارِ، وَهُوَ فِي رَهْطٍ مِنْ أَصْحَابِهِ، وَهُوَ فِي ظِلِّ الْمَسْجِدِ، فَقَالَ أَبُو ذَرٍّ: فَقُلْتُ: نَعَمْ. هَلَكْتُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «وَمَا أَهْلَكَكَ؟» قُلْتُ: إِنِّي كُنْتُ أَعْزُبُ عَنِ الْمَاءِ، وَمَعِي أَهْلِي فَتُصِيبُنِي الْجَنَابَةُ فَأُصَلِّي بِغَيْرِ طُهُورٍ، فَأَمَرَ لِي رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلم بِمَاءٍ، فَجَاءَتْ بِهِ جَارِيَةٌ سَوْدَاءُ بِعُسٍّ يَتَخَضْخَضُ مَا هُوَ بِمَلْآنَ، فَتَسَتَّرْتُ إِلَى بَعِيرِي، فَاغْتَسَلْتُ، ثُمَّ جِئْتُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَا أَبَا ذَرٍّ: إِنَّ الصَّعِيدَ الطَّيِّبَ طَهُورٌ، وَإِنْ لَمْ تَجِدِ الْمَاءَ إِلَى عَشْرِ سِنِينَ، فَإِذَا وَجَدْتَ الْمَاءَ، فَأَمِسَّهُ جِلْدَكَ
قَالَ أَبُو دَاوُدَ: «رَوَاهُ حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ لَمْ يَذْكُرْ أَبْوَالَهَا» قَالَ أَبُو دَاوُدَ: «هَذَا لَيْسَ بِصَحِيحٍ، وَلَيْسَ فِي أَبْوَالِهَا إِلَّا حَدِيثُ أَنَسٍ تَفَرَّدَ بِهِ أَهْلُ الْبَصْرَةِ»
AbuDawood-Tamil-333.
AbuDawood-Shamila-333.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்