பாடம் : 127
காயம் பட்டவர் தயம்மும் செய்தல்.
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நாங்கள் ஒரு பயணம் சென்று கொண்டிருந்தபோது எங்களில் ஒருவர் மேல் கல்பட்டு அவரது தலை காயமாகி விட்டது. பிறகு அவர் (உறங்கும் போது) கனவு கண்டு ஜுனுபாகி விட்டார். எனவே தயம்மம் செய்ய அனுமதி உண்டா? என்று வினவியபோது நீங்கள் தண்ணீரில் (குளிப்பதற்கு) சக்தியுள்ளவராக இருக்கும்போது உனக்கு அப்படி தயம்மம் செய்ய அனுமதி இருப்பதை நாங்கள் காணமுடியவில்லை என்று அவர்கள் பதிலளித்தார்கள். எனவே அவர் (தண்ணீரில்) குளித்ததினால் மரணமடைந்து விட்டார். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தவுடன் இதை அவர்களுக்கு தெரிவிக்கப் பட்டதும் அவர்கள் (பின் வருமாறு) தெரிவித்தார்கள். அவரை அவர்கள் கொன்று விட்டனர்! அல்லாஹ் அவர்களை கொல்வானாக! அவர்கள் (இந்த சட்டத்தை) அறியாமலிருக்கும் போது அவர்கள் கேட்டு தெரிந்திருக்க வேண்டாமா? ஏனெனில் அறியாமை (என்ற நோ)யின் நிவாரணம் (அதைப் பற்றி தெரிந்தவரிடம் வினவுவதாகும். (இறந்த) அவர் தயம்மம் செய்து, அவர் தனது காயத்தில் (ஈர) துணியை பிழிந்து அல்லது (ஈர) துணியை கொண்டு கட்டுப் போட்டு, பிறகு அதன் மீது மஸ்ஹு செய்து அவர் தனது உடல் முழுவதும் கழுவிக் கொள்வதே அவருக்கு போதுமானதாகும் என்று மூஸா பின் அப்துர் ரஹ்மான் அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு : இந்த தொடரில் ஜுபைர் பின் குரைக் என்பவர் இடம் பெறுகின்றார். இமாம் தாரகுத்னீ அவர்கள் இவர் வலுவானவர் அல்லர் என்று குறிப்பிடுகின்றார்கள் என இமாம் ஹாபிர் முன்திரி கூறுகின்றார்கள்.)
(அபூதாவூத்: 336)127- بَابٌ فِي الْمَجْرُوحِ يَتَيَمَّمُ
حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْأَنْطَاكِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنِ الزُّبَيْرِ بْنِ خُرَيْقٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ قَالَ
خَرَجْنَا فِي سَفَرٍ فَأَصَابَ رَجُلًا مِنَّا حَجَرٌ فَشَجَّهُ فِي رَأْسِهِ، ثُمَّ احْتَلَمَ فَسَأَلَ أَصْحَابَهُ فَقَالَ: هَلْ تَجِدُونَ لِي رُخْصَةً فِي التَّيَمُّمِ؟ فَقَالُوا: مَا نَجِدُ لَكَ رُخْصَةً وَأَنْتَ تَقْدِرُ عَلَى الْمَاءِ فَاغْتَسَلَ فَمَاتَ، فَلَمَّا قَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُخْبِرَ بِذَلِكَ فَقَالَ: «قَتَلُوهُ قَتَلَهُمُ اللَّهُ أَلَا سَأَلُوا إِذْ لَمْ يَعْلَمُوا فَإِنَّمَا شِفَاءُ الْعِيِّ السُّؤَالُ، إِنَّمَا كَانَ يَكْفِيهِ أَنْ يَتَيَمَّمَ وَيَعْصِرَ – أَوْ» يَعْصِبَ «شَكَّ مُوسَى – َعلَى جُرْحِهِ خِرْقَةً، ثُمَّ يَمْسَحَ عَلَيْهَا وَيَغْسِلَ سَائِرَ جَسَدِهِ»
AbuDawood-Tamil-336.
AbuDawood-Shamila-336.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்