ஒருவர் ஜும்ஆ தினத்தன்று குளித்து, தனது ஆடைகளில் நல்லதை அணிந்து, அவரிடம் வாசனை திரவியம் இருக்குமானல் அதையும் பூசிக் கொண்டு ஜும்ஆவிற்கு வருகின்றார். மக்களை தாண்டிச் செல்லாமல் தன் மீது அல்லாஹ் கடமையாக்கியதை தொழுகின்றார். இவரது தொழுகை முடிந்து இமாம் வெளியாகும் வரை (யாருடனும் பேசாது) மவுனமாக இருந்தாரென்றால் இவரது இந்த நற்செயல்கள் இந்த ஜும்ஆவிற்கும் முந்தைய ஜும்ஆவிற்கும் இடையில் ஏற்பட்டு விட்ட பாவங்களுக்கு பரிகாரமாகி விடுகின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்கள் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி), அபூஹுரைரா (ரலி)
(ஜும்ஆவிலிருந்து ஜும்ஆ வரை ஏற்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் கால அளவில்) மூன்று நாட்கள் அதிகமாக்கி (பத்து நாட்கள் என்றும்)யும் ஒரு நன்மை செய்யும் போது அதற்கு பதிலாக அது போன்று பத்து நன்மைகள் கிடைக்கும் என்றும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் (இணைத்து) கூறியதாக முஹம்மது பின் ஸலமா கூறுகின்றார்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
(ஹம்மாத், முஹம்மது பின் ஸலமா ஆகிய இருவரும் இணைந்து அறிவிக்கும் இத்தொடரில்) முஹம்மது பின் ஸலமா அறிவிக்கும் ஹதீஸ் நிறைவானதாகும். அபூஹுரைரா (ரலி) அவர்களின் கருத்தை ஹம்மாத் தனது அறிவிப்பில் கூறவில்லை.
மூன்று நாட்கள் என்பதை இடையில் இடம் பெற செய்து அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபூசாலிஹ் மூலம் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
(அபூதாவூத்: 343)حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ الرَّمْلِيُّ الْهَمْدَانِيُّ، ح حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى الْحَرَّانِيُّ قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، ح حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ وَهَذَا حَدِيثُ مُحَمَّدِ بْنِ سَلَمَة، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ – قَالَ أَبُو دَاوُدَ: قَالَ يَزِيدُ، وَعَبْدُ الْعَزِيزِ فِي حَدِيثِهِمَا – عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَأَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي هُرَيْرَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَلَبِسَ مِنْ أَحْسَنِ ثِيَابِهِ، وَمَسَّ مِنْ طِيبٍ إِنْ كَانَ عِنْدَهُ، ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَلَمْ يَتَخَطَّ أَعْنَاقَ النَّاسِ، ثُمَّ صَلَّى مَا كَتَبَ اللَّهُ لَهُ، ثُمَّ أَنْصَتَ إِذَا خَرَجَ إِمَامُهُ حَتَّى يَفْرُغَ مِنْ صَلَاتِهِ كَانَتْ كَفَّارَةً لِمَا بَيْنَهَا وَبَيْنَ جُمُعَتِهِ الَّتِي قَبْلَهَا» – قَالَ: وَيَقُولُ أَبُو هُرَيْرَةِ: «وَزِيَادَةٌ ثَلَاثَةُ أَيَّامٍ» – وَيَقُولُ: «إِنَّ الْحَسَنَةَ بِعَشْرِ أَمْثَالِهَا»
قَالَ أَبُو دَاوُدَ: وَحَدِيثُ مُحَمَّدِ بْنِ سَلَمَةَ أَتَمُّ، وَلَمْ يَذْكُرْ حَمَّادٌ كَلَامَ أَبِي هُرَيْرَةَ
AbuDawood-Tamil-343.
AbuDawood-Shamila-343.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்