தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-344

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

குளிப்பதும் பல் துலக்குவதும் ஜும்ஆ தினத்தின் போது வயது வந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். தன்னால் முடிந்த வரை நறுமணத்தை பூசிக் கொள்ளல் வேண்டும் 

அறிவிப்பவர் : அபூ சயீத் அல் குத்ரீ (ரலி)

(இத்தொடரின் அறிவிப்பாளர்களான) புகைர் என்பார் அபூசயீத் அல் குத்ரீ (ரலி)க்கும் அம்ர் பின் சுலைமுக்கும் இடையில் உள்ள அப்துர் ரஹ்மான் என்ற அறிவிப்பாளரை தனது தொடரில் குறிப்பிடவில்லை.

(தன்) மனைவியிடம் இருந்தேனும் நறுமணத்தை வாங்கி பூசிக் கொள்ள வேண்டும் என்று நறுமணம் தொடர்பாக புகைர் அறிவிக்கின்றார். 

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீயிலும் இடம் பெறுகிறது. இது போன்ற ஹதீஸை அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) யிடமிருந்து அம்ர் பின் சுலைம் அறிவிப்பதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது.)

(அபூதாவூத்: 344)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلَالٍ، وَبُكَيْرَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ حَدَّثَاهُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَالسِّوَاكُ وَيَمَسُّ مِنَ الطِّيبِ مَا قُدِّرَ لَهُ» إِلَّا أَنَّ بُكَيْرًا لَمْ يَذْكُرْ عَبْدَ الرَّحْمَنِ وَقَالَ فِي الطِّيبِ: «وَلَوْ مِنْ طِيبِ الْمَرْأَةِ»


AbuDawood-Tamil-344.
AbuDawood-Shamila-344.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.