தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-347

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஜும்ஆ நாளன்று ஒருவர் குளித்து தன் மனைவியிடத்தில் வாசனைத் திரவியம் இருக்குமானால், அத்திரவியத்தை பூசிக் கொள்கின்றார். தனது ஆடைகளில் நல்லதை அணிகின்றார். (பள்ளியில் நுழைந்ததும்) மக்களைத் தாண்டவும் இல்லை, சொற்பொழிவு நடக்கும் போது அச் சொற்பொழிவை வீணாக்கவும் இல்லை என்றால் (இந்த நற்செயல்கள்) இரண்டு ஜும்ஆக்களுக்கு இடையில் ஏற்பட்ட பாவங்களுக்கு பரிகாரம் ஆகின்றன. எவர் சொற்பொழிவை வீணடித்து, மக்களை தாண்டிச் சென்று விடுகின்றாரோ அவருக்கு (அந்த ஜும்ஆ) லுஹர் தொழுகையாக ஆகிவிடுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் ஆஸ் (ரலி).

(அபூதாவூத்: 347)

حَدَّثَنَا ابْنُ أَبِي عَقِيلٍ، وَمُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمِصْرِيَّانِ قَالَا: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: ابْنُ أَبِي عَقِيلٍ، أَخْبَرَنِي أُسَامَةُ يَعْنِي ابْنَ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ

«مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَمَسَّ مِنْ طِيبِ امْرَأَتِهِ إِنْ كَانَ لَهَا، وَلَبِسَ مِنْ صَالِحِ ثِيَابِهِ، ثُمَّ لَمْ يَتَخَطَّ رِقَابَ النَّاسِ، وَلَمْ يَلْغُ عِنْدَ الْمَوْعِظَةِ كَانَتْ كَفَّارَةً لِمَا بَيْنَهُمَا، وَمَنْ لَغَا وَتَخَطَّى رِقَابَ النَّاسِ كَانَتْ لَهُ ظُهْرًا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-293.
Abu-Dawood-Shamila-347.
Abu-Dawood-Alamiah-293.
Abu-Dawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.