அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர்நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும், தியாகிகளும் பொறாமைப்படுவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மக்கள், அவர்கள் யார்? என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டார்கள். அதற்கு (ஸல்) அவர்கள் தங்களுக்கிடையே இரத்தஉறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு, “அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற (அல்குர்ஆன் 10: 62 வது) வசனத்தை படித்துக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)
(அபூதாவூத்: 3527)حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَا: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لَأُنَاسًا مَا هُمْ بِأَنْبِيَاءَ، وَلَا شُهَدَاءَ يَغْبِطُهُمُ الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ يَوْمَ الْقِيَامَةِ، بِمَكَانِهِمْ مِنَ اللَّهِ تَعَالَى» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، تُخْبِرُنَا مَنْ هُمْ، قَالَ: «هُمْ قَوْمٌ تَحَابُّوا بِرُوحِ اللَّهِ عَلَى غَيْرِ أَرْحَامٍ بَيْنَهُمْ، وَلَا أَمْوَالٍ يَتَعَاطَوْنَهَا، فَوَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورٌ، وَإِنَّهُمْ عَلَى نُورٍ لَا يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ، وَلَا يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ» وَقَرَأَ هَذِهِ الْآيَةَ {أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ} [يونس: 62]
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3060.
Abu-Dawood-Shamila-3527.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3063.
إسناد ضعيف لأن به موضع انقطاع بين أبو زرعة بن عمرو البجلي وعمر بن الخطاب العدوي ، وباقي رجاله ثقات
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அபூஸுர்ஆ பின் அம்ர் அவர்கள், உமர் (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. (நூல்: தஹ்தீபுல் கமால் 33/323)
எனவே இது முன்கதிஃயான அறிவிப்பாளர்தொடர் என்பதால் பலவீனமானதாகும்.
- இந்த செய்தி அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாகவும், வேறு சில நபித்தோழர்கள் வழியாகவும் வந்துள்ளது…. (பார்க்க: இப்னு ஹிப்பான்-573 )
more hadees…
சமீப விமர்சனங்கள்