தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-359

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது மாதவிலக்கின் போது அணிந்திருக்கும் ஆடையில் தொழுவது பற்றி ஒரு குரைஷிப் பெண் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு உம்முஸலமா (ரலி) அவர்கள் பதில் சொன்னார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விடும். அப்போது எங்களில் ஒருவர், தனது மாதவிலக்கான காலத்தில் (தொழாமல்) இருப்பார். பிறகு துப்புறவானதும் எந்த ஆடை அணிந்திருக்கும்போது மாதவிலக்கு ஏற்பட்டதோ அந்த ஆடையை பார்ப்பார். அதில் இரத்தம் பட்டிருந்தால் அதை கழுவி, அந்த ஆடையை அணிந்து கொண்டே தொழுது விடுவார். அதில் எதுவும் படவில்லை என்றால் (கழுவாது) அதை அப்படியே விட்டு விடுவோம். இது தொழுவதை விட்டும் எங்களை தடுத்து விடாது. 

பின்னி போட்ட பெண்ணை பொருத்தவரை எங்களில் ஒருவர் சடை போட்டு பின்னியிருப்பார். அவர் குளிக்கும் போது அதை அவிழ்த்து விடுவதில்லை. எனினும், தனது தலையை மூன்று முறை தனது இரு சிங்கைகளால் தண்ணீர் அள்ளி விடுவார். முடியில் அடிக்காம்புகளில் ஈரப்பதத்தை கண்டவுடன் நன்கு அதை தேய்த்து விடுவார். பிறகு தனது உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார் என தன்னுடைய பாட்டி அறிவிப்பதாக பிகார் பின் யஹ்யா அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 359)

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ مَهْدِيٍّ، حَدَّثَنَا بَكَّارُ بْنُ يَحْيَى، حَدَّثَتْنِي جَدَّتِي قَالَتْ

دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ فَسَأَلَتْهَا امْرَأَةٌ مِنْ قُرَيْشٍ عَنِ الصَّلَاةِ فِي ثَوْبِ الْحَائِضِ، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: «قَدْ كَانَ يُصِيبُنَا الْحَيْضُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَلْبَثُ إِحْدَانَا أَيَّامَ حَيْضِهَا ثُمَّ تَطَّهَّرُ، فَتَنْظُرُ الثَّوْبَ الَّذِي كَانَتْ تَقْلِبُ فِيهِ، فَإِنْ أَصَابَهُ دَمٌ غَسَلْنَاهُ وَصَلَّيْنَا فِيهِ، وَإِنْ لَمْ يَكُنْ أَصَابَهُ شَيْءٌ تَرَكْنَاهُ وَلَمْ يَمْنَعْنَا ذَلِكَ مِنْ أَنْ نُصَلِّيَ فِيهِ، وَأَمَّا الْمُمْتَشِطَةُ فَكَانَتْ إِحْدَانَا تَكُونُ مُمْتَشِطَةً فَإِذَا اغْتَسَلَتْ لَمْ تَنْقُضْ ذَلِكَ، وَلَكِنَّهَا تَحْفِنُ عَلَى رَأْسِهَا ثَلَاثَ حَفَنَاتٍ، فَإِذَا رَأَتِ الْبَلَلَ فِي أُصُولِ الشَّعْرِ دَلَكَتْهُ، ثُمَّ أَفَاضَتْ عَلَى سَائِرِ جَسَدِهَا»


AbuDawood-Tamil-359.
AbuDawood-Shamila-359.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.