ஆடையில் பட்டுவிடும் மாதவிடாய் இரத்தத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, குச்சியை கொண்டு அதை தேய்த்து தண்ணீர் எலந்தை இலையைக் கொண்டு அதை கழுவுவாயகா! என்று சொன்னார்கள் என்று உம்மு கைஸ் பின்த் மிஹ்சன் (ரலி) அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாசரின் மகள் கவ்லா வந்து,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! என்னிடம் ஒரு ஆடையை தவிர வேறில்லை. நான் அதிலேயே மாதவிலக்காகி விடுகின்றேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், நீ துப்புரவானதும் அதை கழுவி அதிலேயே தொழுது கொள்க! என்று சொன்னார்கள். அவர் (தண்ணீர் வைத்து கழுவிய பின்) இரத்தம் போகவில்லை என்றால் (என்ன செய்வது) என்று கேட்டதும், இரத்தத்தை கழுவியது உனக்கு போதுமானது. அதன் கரை உன்னை பாதிக்காது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் பலவீனமாகும்)
(அபூதாவூத்: 363)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ الْقَطَّانَ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي ثَابِتٌ الْحَدَّادُ، حَدَّثَنِي عَدِيُّ بْنُ دِينَارٍ قَالَ: سَمِعْتُ أُمَّ قَيْسٍ بِنْتَ مِحْصَنٍ تَقُولُ
سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ دَمِ الْحَيْضِ يَكُونُ فِي الثَّوْبِ قَالَ: «حُكِّيهِ بِضِلْعٍ، وَاغْسِلِيهِ بِمَاءٍ وَسِدْرٍ»
AbuDawood-Tamil-363.
AbuDawood-Shamila-363.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்