தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-367

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 134

பெண்களின் ஆடையை அணிந்து தொழலாமா ?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாங்கள் எங்களுடைய உடலில் மூடிக் கொள்ளும் ஆடைகளில் தொழமாட்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் ஷுமர் அல்லது லுஹுப் என்று தனது தந்தை ஷகீக் அறிவிப்பதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைத்துல்லாஹ் தெரிவிக்கின்றார். லுஹுப் என்றால் ஒரு ஆடைக்கு மேல் மூடப்படும் இன்னொரு ஆடை என்பதாகும்.

ஷுமர் என்றால் இன்னொரு ஆடையின்றி உடலை ஒட்டி மூடப்படும் ஆடையாகும் ஆக இரு வார்த்தைகளும் கிட்டதட்ட ஒரே பொருளையே தருகின்றன.

(அபூதாவூத்: 367)

134- بَابُ الصَّلَاةِ فِي شُعُرِ النِّسَاءِ

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْأَشْعَثُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّ فِي شُعُرِنَا، أَوْ فِي لُحُفِنَا» قَالَ عُبَيْدُ اللَّهِ: شَكَّ أَبِي


AbuDawood-Tamil-367.
AbuDawood-Shamila-367.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.