தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-368

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் நாங்கள் எங்களுடைய உடல்களை மூடிக் கொள்ளும் ஆடைகளில் தொழமாட்டார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

இதை இப்னு சிரீன் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஹம்மாத் கூறுகின்றார் :

நான் முஹம்மத் பின் சீரின் அவர்களிடம் இந்த ஹதீஸ் பற்றி கேட்டபோது அவர் இந்த ஹதீஸ் (யாரிடமிருந்து கேட்டேன் என்று) அறிவிக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு முன்பு இதை நான் செவியுற்றேன். மேலும் இதை யாரிடமிருந்து நான் செவியுற்றேன் என்று எனக்கு தெரியவில்லை. சரியான ஆளிடம் கேட்டேனா? இல்லையா? என்றும் தெரியவில்லை. எனவே இந்த ஹதீஸ் பற்றி மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். என்று சயீத் பின் அபீ சதாகா கூற நான் செவிமடுத்தேன்.

முகீரா, அபூமஃஷர், வாஸில் ஆகியோர் ஹம்மாத் என்பாரின் அறிவிப்பில் ஒன்று படுகின்றனர்.

(அபூதாவூத்: 368)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَائِشَةَ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يُصَلِّي فِي مَلَاحِفِنَا»

قَالَ حَمَّادٌ: وَسَمِعْتُ سَعِيدَ بْنَ أَبِي صَدَقَةَ قَالَ: سَأَلْتُ مُحَمَّدًا عَنْهُ فَلَمْ يُحَدِّثْنِي، وَقَالَ: سَمِعْتُهُ مُنْذُ زَمَانٍ، وَلَا أَدْرِي مِمَّنْ سَمِعْتُهُ، وَلَا أَدْرِي أَسَمِعْتُهُ مِنْ ثَبْتٍ أَوْ لَا فَسَلُوا عَنْهُ


AbuDawood-Tamil-368.
AbuDawood-Shamila-368.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.