பாடம் : 136
விந்துபட்ட ஆடை பற்றிய சட்டம்.
ஹம்மாம் பின் ஹாரிஸ் ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்களிடம் தங்கியிருந்தார்கள். அப்போது அவர் (தூங்கும் போது) ஸ்கலிதமாகி விட்டார். தன் ஆடையில் பட்ட இந்திரியத்தின் கரையையோ அல்லது ஆடையையோ கழுவும் போது அன்னையாரின் அடிமைப் பெண் பார்த்து விட்டு அன்னையாரிடம் தெரியப்படுத்தி விடுகின்றார். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், நிச்சயமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து இந்திரியக் கரையை நானே சுரண்டியிருக்கிறேன். (அதனால் கரையை நீக்குவதற்காக ரொம்ப நீ அலட்டிக் கொள்ளத் தேவையில்லை) என்று சொன்னார்கள் என்று ஹம்மாம் பின் அல் ஹாரிஸ் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸை ஹகம் அவர்கள் அறிவிப்பது போன்று அஃமஷ் அவர்களும் அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 371)136- بَابُ الْمَنِيِّ يُصِيبُ الثَّوْبَ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ
أَنَّهُ كَانَ عِنْدَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَاحْتَلَمَ، فَأَبْصَرَتْهُ جَارِيَةٌ لِعَائِشَةَ وَهُوَ يَغْسِلُ أَثَرَ الْجَنَابَةِ مِنْ ثَوْبِهِ، أَوْ يَغْسِلُ ثَوْبَهُ، فَ أَخْبَرَتْ عَائِشَةَ فَقَالَتْ: «لَقَدْ رَأَيْتُنِي وَأَنَا أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ الْأَعْمَشُ كَمَا رَوَاهُ الْحَكَمُ
AbuDawood-Tamil-371.
AbuDawood-Shamila-371.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்