தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-376

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஊழியம் செய்து கொண்டிருந்தேன். அவர்கள் குளிக்க விரும்பினால் உனது முதுகுப் பக்கத்தை என்னை நோக்கி காட்டியவாறு திரும்பி நில் ! என்று சொல்வார்கள். எனது முதுகுப் பக்கத்தை அவர்களை நோக்கி காட்டியவாறு நின்று அதன் மூலம் அவர்கள் குளிப்பதை மறைத்துக் கொண்டிருக்கும் போது (சிறு குழந்தையான) ஹசன் அல்லது ஹுசைனையோ அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அக்குழந்தை அவர்களின் நெஞ்சின் மீது சிறுநீர் கழித்து விட்டது. நான் உடனே அதை கழுவ வந்ததும் பெண் குழந்தையின் சிறுநீருக்காக கழுவப்படும், ஆண் குழந்தையின் சிறுநீருக்காக தெளிக்கப் படும் என்று சொன்னார்கள்.

இதை யஹ்யா பின் வலீத் அவர்கள் அறிவிக்கின்றார். எனக்கு அறிவித்தார் என்ற இடத்தில் எமக்கு அறிவித்தார் என்று அப்பாஸ் என்ற அறிவிப்பாளர் கூறுகின்றார்.

யஹ்யா பின் வலீத் என்பவர் அபூசஃரா என்று (இடுகுறி பெயரால்) அழைக்கப் படுகிறார்.

எல்லா சிறுநீரும் (அசுத்தம் என்பதில்) சமம் தான் என்று ஹஸன் அல் பஸரி கூறினார்கள். ஹஸன் பஸரீ வாயிலாக ஹாரூன் பன் தமீம் அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 376)

حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى، وَعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ الْمَعْنَى قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ الْوَلِيدِ، حَدَّثَنِي مُحِلُّ بْنُ خَلِيفَةَ، حَدَّثَنِي أَبُو السَّمْحِ قَالَ

كُنْتُ أَخْدِمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ إِذَا أَرَادَ أَنْ يَغْتَسِلَ قَالَ: «وَلِّنِي قَفَاكَ». فَأُوَلِّيهِ قَفَايَ فَأَسْتُرُهُ بِهِ، فَأُتِيَ بِحَسَنٍ، أَوْ حُسَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَبَالَ عَلَى صَدْرِهِ فَجِئْتُ أَغْسِلُهُ فَقَالَ: «يُغْسَلُ مِنْ بَوْلِ الْجَارِيَةِ، وَيُرَشُّ مِنْ بَوْلِ الْغُلَامِ» قَالَ عَبَّاسٌ: حَدَّثَنَا يَحْيَى بْنُ الْوَلِيدِ

قَالَ أَبُو دَاوُدَ : وَهُوَ أَبُو الزَّعْرَاء قَالَ هَارُونُ بْنُ تَمِيمٍ: عَنِ الْحَسَنِ قَالَ: «الْأَبْوَالُ كُلُّهَا سَوَاءٌ»


AbuDawood-Tamil-376.
AbuDawood-Shamila-376.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.