பாடம் : 138
சிறுநீர் பட்ட மண்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்கும் போது ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்தார். இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார். பிறகு எனக்கும் முஹம்மதுக்கும் அருள் செய்வாயாக! எங்களுடன் வேறு யாருக்கும் அருள் செய்யாதே! என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் விரிவாக்கிய அருளை (மற்றவர்களுக்கு இல்லாமல்) உன்னோடும் என்னோடும் சுருக்கி விட்டாயே! என்று சொன்னார்கள். பிறகு கொஞ்ச நேரம் கூட அவர் இருந்திருக்கமாட்டார். அதற்குள்ளாக பள்ளியில் ஒரு பக்கத்தில் சிறுநீர் கழித்து விட்டார். உடனே மக்கள் அவரை நோக்கி விரைந்தனர். அவர்களை உடனே நபி (ஸல்) அவர்கள் (ஏதும் கடுமையாக பேசிவிடாது) தடுத்தார்கள்.
மேலும், நீங்கள் நளினம் காட்டுபவர்களாக (பிறரிடம்) எடுத்துச் சொல்பவர்களாகவே அனுப்பப் பட்டுள்ளீர்கள்! கடினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப் படவில்லை. சிறுநீரில் ஒரு வாளி நிறைய தண்ணீரை ஊற்றச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).
(அபூதாவூத்: 380)بَابُ الْأَرْضِ يُصِيبُهَا الْبَوْلُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، وَابْنُ عَبْدَةَ فِي آخَرِينَ – وَهَذَا لَفْظُ ابْنِ عَبْدَة – أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةِ،
أَنَّ أَعْرَابِيًّا دَخَلَ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ فَصَلَّى قَالَ ابْنُ عَبْدَة: رَكْعَتَيْنِ، ثُمَّ قَالَ: اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا، وَلَا تَرْحَمْ مَعَنَا أَحَدًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ تَحَجَّرْتَ وَاسِعًا». ثُمَّ لَمْ يَلْبَثْ أَنْ بَالَ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ فَأَسْرَعَ النَّاسُ إِلَيْهِ، فَنَهَاهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «إِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ، وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ، صُبُّوا عَلَيْهِ سَجْلًا مِنْ مَاءٍ» أَوْ قَالَ: «ذَنُوبًا مِنْ مَاءٍ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-380.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்