பாடம் : 142
அசுத்தம் பட்ட ஆடையுடன் தொழுதால் மீண்டும் தொழுவது.
ஆடையில் படுகின்ற இரத்தத்தை பற்றி ஆயிஷா(ரலி) அவர்களிடம் உம்மு ஜஷ்தர் (ரலி) அவர்கள் கேட்ட போது ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கின்றார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். எங்கள் மேல் எங்களுடைய உள்ளாடை கிடக்கும் நிலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனிருந்தேன். அந்த ஆடைக்கு மேல் நாங்கள் ஒரு மேலாடை போட்டிருந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலையில் அந்த மேலாடையை எடுத்து அணிந்து கொள்வார்கள். பிறகு வெயியே புறப்பட்டு காலைத் தொழுகையை தொழுதுவிட்டு அமர்ந்தார்கள். அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இதோ கொஞ்சம் இரத்தக் கரை உள்ளதே! என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அதை அடுத்துள்ள பகுதியை சுருக்கி பிடித்து , ஒரு அடிமையின் கையில் சுருட்டி கொடுத்து அனுப்பி வைத்து ஆயிஷாவே! இதை கழுவி காயவைத்து என்னிடம் அனுப்பி வை என்று சொன்னார்கள். நான் என் பாத்திரத்தை கொண்டு வரச் செய்து அதை கழுவினேன். பிறகு அதை காய வைத்து திருப்பி கொடுத்தனுப்பினேன். நண்பகலில் அந்த ஆடை தன்மேல் கிடந்தவாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள் என்று தனது உறவினரான உம்மு ஜஹ்தர் அல் ஆமிரிய்யாஹ் கூறியதாக உம்மு •யூனூஸ் அறிவிக்கின்றார்கள்.
(அபூதாவூத்: 388)142- بَابُ الْإِعَادَةِ مِنَ النَّجَاسَةِ تَكُونُ فِي الثَّوْبِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَتْنَا أُمُّ يُونُسَ بِنْتُ شَدَّادٍ قَالَتْ: حَدَّثَتْنِي حَمَاتِي أُمُّ جَحْدَرٍ الْعَامِرِيَّةُ
أَنَّهَا سَأَلَتْ عَائِشَةَ عَنْ دَمِ الْحَيْضِ يُصِيبُ الثَّوْبَ فَقَالَتْ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْنَا شِعَارُنَا، وَقَدْ أَلْقَيْنَا فَوْقَهُ كِسَاءً، فَلَمَّا أَصْبَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ الْكِسَاءَ فَلَبِسَهُ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الْغَدَاةَ، ثُمَّ جَلَسَ فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، هَذِهِ لُمْعَةٌ مِنْ دَمٍ، فَقَبَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَا يَلِيهَا، فَبَعَثَ بِهَا إِلَيَّ مَصْرُورَةً فِي يَدِ الْغُلَامِ فَقَالَ: «اغْسِلِي هَذِهِ وَأَجِفِّيهَا ، ثُمَّ أَرْسِلِي بِهَا إِلَيَّ». فَدَعَوْتُ بِقَصْعَتِي فَغَسَلْتُهَا، ثُمَّ أَجْفَفْتُهَ فَأَحَرْتُهَا إِلَيْهِ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنِصْفِ النَّهَارِ وَهِيَ عَلَيْهِ
AbuDawood-Tamil-388.
AbuDawood-Shamila-388.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்