பாடம் : 145
தொழுகை நேரங்கள்.
கஃபாவில் இரு தடவை ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் எனக்கு முன்னின்று தொழுவித்தார்கள். செருப்பின் வார் அளவிற்கு சூரியன் சாய்ந்த நேரத்தில் என்னோடு லுஹர் தொழுவித்தார்கள். ஒரு பொருளின் அது போன்ற அளவுக்கு ஆகிவிடும் போது என்னுடன் அஸர் தொழுவித்தார்கள். நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் என்னுடன் மக்ரிபு தொழுதார்கள். செம்மேகம் மறைந்ததும் என்னுடன் இஷா தொழுதார்கள். உண்ணுவதும், குடிப்பதும் நோன்பாளிக்கு கடைசியாகி விடும் நேரத்தில் என்னுடன் பஜ்ர் தொழுதார்கள். மறுநாளானதும், ஒரு பொருளின் அளவு அது போன்று ஆகிவிட்ட நேரத்தில் என்னுடன் லுஹர் தொழுதார்கள். ஒரு பொருளின் அது போன்று இரு மடங்கான நேரத்தில் என்னுடன் அஸர் தொழுதார்கள். நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் என்னுடன் மக்ரிபு தொழுதார்கள். இரவில் மூன்றாம் பகுதி கடந்த போது என்னுடன் இஷா தொழுதார்கள். என்னுடன் சுப்ஹ் தொழுதார்கள். அப்போது வானம் வெளுக்க ஆரம்பித்து விட்டது. பிறகு என்னை நோக்கி திரும்பி, முஹம்மதே! இத்தொழுகை உமக்கு முன்னால் உள்ள இறைத் தூதர்களின் தொழுகை நேரமாகும். இவ்விரு நேரங்களுக்கிடையில் தான் தொழுகை நேரம் அடங்கியிருக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).
(அபூதாவூத்: 393)145- بَابٌ فِي الْمَوَاقِيتِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ فُلَانِ بْنِ أَبِي رَبِيعَةَ، عَنْ حَكِيمِ بْنِ حَكِيمٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَمَّنِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام عِنْدَ الْبَيْتِ مَرَّتَيْنِ، فَصَلَّى بِيَ الظُّهْرَ حِينَ زَالَتِ الشَّمْسُ وَكَانَتْ قَدْرَ الشِّرَاكِ، وَصَلَّى بِيَ الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّهُ مِثْلَهُ، وَصَلَّى بِيَ يَعْنِي الْمَغْرِبَ حِينَ أَفْطَرَ الصَّائِمُ، وَصَلَّى بِيَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ، وَصَلَّى بِيَ الْفَجْرَ حِينَ حَرُمَ الطَّعَامُ وَالشَّرَابُ عَلَى الصَّائِمِ، فَلَمَّا كَانَ الْغَدُ صَلَّى بِيَ الظُّهْرَ حِينَ كَانَ ظِلُّهُ مِثْلَهُ، وَصَلَّى بِي الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّهُ مِثْلَيْهِ، وَصَلَّى بِيَ الْمَغْرِبَ حِينَ أَفْطَرَ الصَّائِمُ، وَصَلَّى بِيَ الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ، وَصَلَّى بِيَ الْفَجْرَ فَأَسْفَرَ» ثُمَّ الْتَفَتَ إِلَيَّ فَقَالَ: «يَا مُحَمَّدُ، هَذَا وَقْتُ الْأَنْبِيَاءِ مِنْ قَبْلِكَ، وَالْوَقْتُ مَا بَيْنَ هَذَيْنِ الْوَقْتَيْنِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-393.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்