தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-397

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 146

நபி ஸல் அவர்களின் தொழுகை நேரமும் அந்நேரத்தில் தொழுத விதமும்.

நபி (ஸல்) அவர்களின் தொழுகை நேரத்தைப் பற்றி ஜாபிர் (ரலி)யிடம் நாங்கள் விசாரித்தோம். அதற்கு அவர், நபி (ஸல்) அவர்கள் நடுப்பகலில் ழுஹரையும், சூரியன் பிரகாசமாக இருக்கும் போது அஸரையும், சூரியன் மறைந்ததும் மக்ரிபையும், இஷாவை மக்கள் அதிகமாக இருந்தால் விரைந்தும், மக்கள் குறைவாக இருந்தால் பிற்படுத்தியும், சுப்ஹை அதிகாலை நேரத்திலும் தொழுபவர்களாக இருந்தனர் என்று முஹம்மது பின் அம்ர் (ரலி) அறிவிக்கின்றார்கள். இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சி காயும் போது ழுஹரை தொழுவார்கள். எங்களில் ஒருவர் மதீனாவின் கடைசிக்கு போய் விட்டு திரும்புகிற நேரத்தில் அஸர் தொழுவார்கள். அந்த நேரத்தில் சூரியன் உயிருடன் (சூடு குறையாமல்) இருக்கும். நான் மக்ரிப் நேரத்தை மறந்து விட்டேன். இஷாவை இரவில் மூன்றில் ஒரு பகுதி கழியும் வரை பிற்படுத்துவதை சிரமமாகக் கருதமாட்டார்கள். இஷாவுக்கு தூங்குவதையும், இஷாவுக்கு பிறகு பேசிக் கொண்டிருப்பதையும் அவர்கள் வெறுப்பார்கள். தனக்கு ஏற்கனவே அறிமுகமான நண்பரை எங்களில் ஒருவர் அடையாளங்கண்டு கொள்ளும் நேரத்தில் சுப்ஹை தொழுவார்கள். அந்த சுப்ஹ் தொழுகையில் அறுபதிலிருந்து நூறுவரை உள்ள வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதுவார்கள் என்று அபூபர்சா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பாதி இரவு வரை பிற்படுத்த தயங்க மாட்டார்கள் எனவும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் அறிவிக்கின்றார். இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.

(அபூதாவூத்: 397)

146- بَابٌ فِي وَقْتِ صَلَاةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَيْفَ كَانَ يُصَلِّيهَا

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو وَهُوَ ابْنُ الْحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ

سَأَلْنَا جَابِرًا عَنْ وَقْتِ صَلَاةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «كَانَ يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ، وَالْعَصْرَ وَالشَّمْسُ حَيَّةٌ، وَالْمَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ، وَالْعِشَاءَ إِذَا كَثُرَ النَّاسُ عَجَّلَ، وَإِذَا قَلُّوا أَخَّرَ، وَالصُّبْحَ بِغَلَسٍ»


AbuDawood-Tamil-397.
AbuDawood-Shamila-397.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.