தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-398

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் சூரியன் பிரகாசமாக இருக்கும் போது லுஹர் தொழுவார்கள். அஸரும் தொழுவார்கள். எங்களில் ஒருவர் மதினாவின் கடைசிப்பகுதிக்கு சென்றுவிட்டு திரும்புவார் அப்போது சூரியன் இருந்து கொண்டிருக்கும். மஃரிப் தொழுகை பற்றிக் கூறியதை நான் மறந்துவிட்டேன். இஷாவை இரவின் மூன்றின் ஒரு பகுதி வரை அல்லது நடுப்பகுதி வரை தாமதப்படுத்துவதைப் பொருட்படுத்த மாட்டார்கள். அதற்குப் முன்பு தூங்குவதையும் அதற்குப் பின்பு பேசுபவதையும் வெறுப்பார்கள். எங்களில் ஒவ்வொருவரும் தமது தோழரை அறிந்து கொள்ளும் (அளவுக்கு வெளிச்சம் இருக்கும்) வேளையில் சுப்ஹு தொழுவார்கள். அதிலே அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதுவார்கள்.

(அபூதாவூத்: 398)

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنْ أَبِي بَرْزَةَ قَالَ

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الظُّهْرَ إِذَا زَالَتِ الشَّمْسُ ، وَيُصَلِّي الْعَصْرَ وَإِنَّ أَحَدَنَا لَيَذْهَبُ إِلَى أَقْصَى الْمَدِينَةِ، وَيَرْجِعُ وَالشَّمْسُ حَيَّةٌ، وَنَسِيتُ الْمَغْرِبَ، وَكَانَ لَا يُبَالِي تَأْخِيرَ الْعِشَاءِ إِلَى ثُلُثِ اللَّيْلِ» – قَالَ: ثُمَّ قَالَ: إِلَى شَطْرِ اللَّيْلِ – قَالَ: «وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ بَعْدَهَا، وَكَانَ يُصَلِّي الصُّبْحَ، وَمَا يَعْرِفُ أَحَدُنَا جَلِيسَهُ الَّذِي كَانَ يَعْرِفُهُ، وَكَانَ يَقْرَأُ فِيهَا مِنَ السِّتِّينَ إِلَى الْمِائَةِ»


AbuDawood-Tamil-398.
AbuDawood-Shamila-398.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.