தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-401

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது முஅத்தின் ழுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்ததும் நபி (ஸல்) அவர்கள் சூடு தணியட்டும் என்றார்கள். மீண்டும் முஅத்தின் ழுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்ததும் நபி (ஸல்) அவர்கள் சூடு தணியட்டும் என்றார்கள். இரு தடவையோ அல்லது மூன்று தடவையோ சொன்னார்கள். கடைசியில் நாங்கள் மலைக்குன்றுகளின் நிழலை கண்டோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் கடுமையான வெப்பம் நரகத்தின் அனலாகும் நெருப்பாகும். எனவே, வெப்பம் கடுமையாகி விட்டால் சூடு தணிந்து தொழுங்கள் என்று சொன்னார்கள் என்று அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது.

(அபூதாவூத்: 401)

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي أَبُو الْحَسَنِ قَالَ: أَبُو دَاوُدَ أَبُو الْحَسَنِ هُوَ مُهَاجِرٌ، قَالَ: سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ يَقُولُ: سَمِعْتُ أَبَا ذَرٍّ يَقُولُ

كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ الظُّهْرَ فَقَالَ: «أَبْرِدْ». ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ فَقَالَ: «أَبْرِدْ» – مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا – حَتَّى رَأَيْنَا فَيْءَ التُّلُولِ، ثُمَّ قَالَ: «إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلَاةِ»


AbuDawood-Tamil-401.
AbuDawood-Shamila-401.
AbuDawood-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-539 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.