தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-410

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

தனக்கு ஒரு குர்ஆனை எழுதி தருமாறு எனக்கு ஆயிஷா (ரலி) உத்தரவிட்டார்கள். தொழுகைகளையும் நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள் (2 : 238) என்ற வசனத்தை அடைந்ததும் எனக்கு தெரிவி என்றும் சொன்னார்கள். நான் அந்த வசனத்தை அடைந்ததும் அதை அவர்களிடம் தெரிவித்தேன். 

தொழுகைகளையும் நடுத் தொழுகையையும் அஸர் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள். மேலும் (தொழுகையில்) அல்லாஹ்வுக்கு அஞ்சி மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள் என்று (அஸர் தொழுகை என்பதை சேர்த்து) எழுதச் செய்தார்கள். பிறகு இதை நான் அல்லாஹ்வின் தூதரிடம் செவியுற்றேன் என்றும் தெரிவித்தார்கள் என அபூயூனூஸ் அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.)

(அபூதாவூத்: 410)

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي يُونُسَ مَوْلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهُ قَالَ

أَمَرَتْنِي عَائِشَةُ أَنْ أَكْتُبَ لَهَا مُصْحَفًا وَقَالَتْ: ” إِذَا بَلَغْتَ هَذِهِ الْآيَةَ فَآذِنِّي: {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى} [البقرة: 238] «، فَلَمَّا بَلَغْتُهَا آذَنْتُهَا، فَأَمْلَتْ عَلَيَّ» حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى، وَصَلَاةِ الْعَصْرِ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ “، ثُمَّ قَالَتْ عَائِشَةُ: «سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلّمَ»


AbuDawood-Tamil-410.
AbuDawood-Shamila-410.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.