நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி)யிடம் சென்றோம். அப்போது அவர் அஸர் தொழுகையை தொழலானார். அவர் தொழுது முடித்ததும் தொழுகையை (அதன் நேரத்தை விட்டும் தாமதப் படுத்தி) விரைவாகத் தொழுவதை நாங்கள் குறிப்பிட்டோம் அல்லது அவர் குறிப்பிட்டார். அப்போது, அவர் அது நயவஞ்சகர்களின் தொழுகையாகும், அது நயவஞ்சகர்களின் தொழுகையாகும். அவர்களில் ஒருவர் சூரியன் மஞ்சள் நிறமாகி அது சைத்தானின் இரு கொம்புகளுக்கிடையில் அல்லது இரு கொம்புகளின் மீது (அறிவிப்பாளர் ஐயம்) ஆகிவிடும் வரை உட்கார்ந்து விட்டு பிறகு எழுந்து நான்கு ரக்அத்துக்களை மிக வேகமாக தொழுவார். அவற்றில், மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ்வை கொஞ்சமாகவே தவிர நினைவு கூற மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது.)
(அபூதாவூத்: 413)حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ قَالَ
دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ بَعْدَ الظُّهْرِ، فَقَامَ يُصَلِّي الْعَصْرَ، فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ ذَكَرْنَا تَعْجِيلَ الصَّلَاةِ أَوْ ذَكَرَهَا، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِينَ، تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِينَ، تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِينَ يَجْلِسُ أَحَدُهُمْ حَتَّى إِذَا اصْفَرَّتِ الشَّمْسُ فَكَانَتْ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ، أَوْ عَلَى قَرْنَيِ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَ أَرْبَعًا لَا يَذْكُرُ اللَّهَ فِيهَا إِلَّا قَلِيلًا»
AbuDawood-Tamil-413.
AbuDawood-Shamila-413.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்