தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-420

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஓர் இரவு அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களை இஷா தொழுகைக்காக எதிர்பார்த்து காத்திருந்தோம். இரவில் மூன்றில் ஒரு பகுதி கழிந்த பிறகு அல்லது அதற்கு பிறகு எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். ஏதாவது ஒரு வேலையில் ஈடுபாடு கொண்டிருந்தார்களா? அல்லது வேறெதாவது காரணம் உண்டா? என்று எங்களுக்கு தெரியாது. இந்த தொழுகையை இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களா? எனது சமுதாயத்திற்கு கடினமாக இல்லாதிருப்பின் அவர்களுக்கு இந்த நேரத்திலேயே தொழுவித்திருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிட்டதும் அவர் தொழுகைக்கு இகாமத் சொன்னார் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது.)

(அபூதாவூத்: 420)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَكَمِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ

مَكَثْنَا ذَاتَ لَيْلَةٍ نَنْتَظِرُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَلَاةِ الْعِشَاءِ فَخَرَجَ إِلَيْنَا حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ أَوْ بَعْدَهُ فَلَا نَدْرِي أَشَيْءٌ شَغَلَهُ أَمْ غَيْرُ ذَلِكَ، فَقَالَ: حِينَ خَرَجَ «أَتَنْتَظِرُونَ هَذِهِ الصَّلَاةَ لَوْلَا أَنْ تَثْقُلَ عَلَى أُمَّتِي لَصَلَّيْتُ بِهِمْ هَذِهِ السَّاعَةَ»، ثُمَّ أَمَرَ الْمُؤَذِّنَ فَأَقَامَ الصَّلَاةَ


AbuDawood-Tamil-420.
AbuDawood-Shamila-420.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.