தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-425

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 152

தொழுகைக்குரிய நேரங்களில் தொழுவதில் பேணுதலாக இருத்தல்.

வித்ரு தொழுகை கடமையாகும் என்று அபூமுஹம்மது கூறுகின்றார் என அப்துல்லாஹ் பின் சனாபிஹ் தெரிவித்தார். அதை அறிந்த உப்பாதா பின் சாமித், அபூ முஹம்மது பொய் சொல்கின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கின்றேன் என்று பின் வரும் ஹதீஸை அறிவிக்கலானார்.

ஐந்து நேரத் தொழுகைகளை உயர்வான அல்லாஹ் கடமையாக்கி இருக்கின்றான். யார் அந்த தொழுகைகளின் உலூவை அழகுறச் செய்து அந்த தொழுகைகளை அவற்றிற்குரிய நேரங்களில் தொழுது, அந்த தொழுகைகளின் ருகூவையும், அவற்றின் இறையச்சத்தையும் பூரணமாக நிறைவேற்றுகின்றாரோ அவரது பாவத்தை அல்லாஹ் மன்னிப்பதாக ஒரு வாக்குறுதி அவருக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்து விடுகின்றது. யார் அவ்வாறு செய்யவில்லையோ அவருக்கு அல்லாஹ்விடமிருந்து எந்த வாக்குறுதியும் கிடையாது. அவன் நாடினால் அவரை மன்னிப்பான். அவன் நாடினால் அவரை தண்டிப்பான்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் அஹ்மத், முஅத்தா, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

(அபூதாவூத்: 425)

152- بَابٌ فِي الْمُحَافَظَةِ عَلَى وَقْتِ الصَّلَوَاتِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا يَزِيدُ يَعْنِي ابْنَ هَارُونَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصُّنَابِحِيّ، قَالَ

زَعَمَ أَبُو مُحَمَّدٍ أَنَّ الْوِتْرَ وَاجِبٌ، فَقَالَ: عُبَادَةُ بْنُ الصَّامِتِ كَذَبَ أَبُو مُحَمَّدٍ أَشْهَدُ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خَمْسُ صَلَوَاتٍ افْتَرَضَهُنَّ اللَّهُ تَعَالَى مَنْ أَحْسَنَ وُضُوءَهُنَّ وَصَلَّاهُنَّ لِوَقْتِهِنَّ وَأَتَمَّ رُكُوعَهُنَّ وَخُشُوعَهُنَّ كَانَ لَهُ عَلَى اللَّهِ عَهْدٌ أَنْ يَغْفِرَ لَهُ، وَمَنْ لَمْ يَفْعَلْ فَلَيْسَ لَهُ عَلَى اللَّهِ عَهْدٌ، إِنْ شَاءَ غَفَرَ لَهُ وَإِنْ شَاءَ عَذَّبَهُ»


AbuDawood-Tamil-425.
AbuDawood-Shamila-425.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.