தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-431

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 153

உரிய நேரத்தை விட்டும் இமாம் தொழுகையை பிற்படுத்துதல்.

அபூதரே! தொழுகையை (உரிய நேரத்தில் தொழாமல்) மரணிக்கச் செய்கின்ற அல்லது பிற்படுத்துகின்ற (அறிவிப்பாளரின் ஐயம்) தலைவர்கள் உன்மீது ஆட்சி செலுத்தினால் நீ எப்படி நடந்து கொள்வாய்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே! அப்போது (நான் என்ன வேண்டும் என) எனக்கு நீங்கள் கட்டளையிடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள், தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது விடுக! அவர்களுடன் தொழுகையை நீ அடையும் போது அதையும் தொழுது கொள்க! அது உனக்கு உபரியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

(அபூதாவூத்: 431)

153- بَابٌ إِذَا أَخَّرَ الْإِمَامُ الصَّلَاةَ عَنِ الْوَقْتِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي عِمْرَانَ يَعْنِي الْجَوْنِيَّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ

قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَا أَبَا ذَرٍّ كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُمِيتُونَ الصَّلَاةَ؟ – أَوْ قَالَ: يُؤَخِّرُونَ الصَّلَاةَ؟ – “، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فَمَا تَأْمُرُنِي، قَالَ: «صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ فَصَلِّهَا فَإِنَّهَا لَكَ نَافِلَةٌ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-431.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-366.




மேலும் பார்க்க: முஸ்லிம்-1140 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.